பிரதமர் அலுவலகம்
கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவன 'ஸ்வாவ்லம்பான்" (தற்சார்பு) கருத்தரங்கத்தில் பிரதமர ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
18 JUL 2022 8:23PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களான திரு.ராஜ்நாத் சிங் அவர்களே, திரு.அஜய் பட் அவர்களே, கடற்படை தலைவர், கடற்படை துணைத்தலைவர், பாதுகாப்பு செயலாளர், இந்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்களின் சங்க தலைவர் அவர்களே, மற்றும் கல்வித்துறை மற்றும் தொழில்துறையுடன் தொடர்புடைய எனது சகாக்களே, பிற உயரதிகாரிகளே, சகோதர, சகோதரிகளே,
ஆயுதப் படையில் தன்னிறைவை அடைவது என்பது, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடற்படையில் தன்னிறைவை அடைவது 'ஸ்வாவ்லம்பன்' (தற்சார்பு) கருத்தரங்கம் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த கருத்தரங்கை கூட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நண்பர்களே,
ராணுவத் தயார் நிலைக்கான கூட்டுப் பயிற்சிகள், குறிப்பாக கடற்படையில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த கருத்தரங்கமும் ஒருவகையில் கூட்டுப் பயிற்சிதான். தன்னம்பிக்கைக்கான இந்த கூட்டுப் பயிற்சியில், கடற்படை, தொழில்துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மற்றும் உலகெங்கும் உள்ள மக்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஒன்றாக இணைவது பற்றி சிந்திக்கின்றனர். இந்த கூட்டுப் பயிற்சியின் முக்கியக் குறிக்கோள், பங்கேற்பாளர்கள் அனைவருக்குமான அதிகபட்ச வெளிப்பாடு, பரஸ்பர புரிதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஏற்று கொள்வது. எனவே இந்த கூட்டுப் பயிற்சியின் குறிக்கோள் மிகவும் முக்கியமானது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்தியக் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது என்பது மிகப்பெரிய படியாகும்.
நண்பர்களே,
நமது கடல்களும், கடலோர எல்லைகளும் நம் பொருளாதார தன்னம்பிக்கையின் பெரும் பாதுகாவலர்கள் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கின்றன. எனவே இந்திய கடற்படையின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடற்படை தனது துறைக்காக மட்டுமின்றி, நாட்டின் வளர்ந்து வரும் தேவைகளுக்காகவும் தற்சார்புடன் இருப்பது மிக அவசியமாகும். இந்த கருத்தரங்கின் உள்ளடக்கம், நமது படைகள் தன்னிறைவு பெறுவதற்கு மிகவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு குறித்து விவாதிக்கும் இந்த நேரத்தில், கடந்த காலங்களில் நடந்தவைகளிலிருந்து நாம் பாடங்களை கற்று கொள்வதும் மிகவும் அவசியம். இது எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். வளமான கடல்சார் பாரம்பரியத்தை நாம் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இந்தியாவின் வளமான வணிகம் இந்த பாரம்பரியத்தின் ஒருபகுதியாக இருந்து வருகிறது. நமது மூதாதையர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததற்கு காரணம், அவர்கள் காற்றின் திசை மற்றும் விண்வெளி அறிவியலை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர். வெவ்வேறு பருவநிலைகளில் காற்றி வீசும் திசைகள் பற்றியும், அதனை பயன்படுத்தி இலக்கை அடைவது குறித்தும் நமது முன்னோர்கள் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842492
***************
(Release ID: 1842716)
Visitor Counter : 191
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam