நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Posted On: 18 JUL 2022 9:12AM by PIB Chennai

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் இன்று, ஜூலை 18, 2022 முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தயாரிப்பின் பெயரோ அல்லது பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்பின் பெயருள்ள பொருட்களுக்கோ ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

 இது சம்பந்தமாக பருப்பு வகைகள், மாவு, தானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பற்றி சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இன்று முதல் அமலுக்கு வந்த ஏற்கனவே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது தொடர்பாக எழும் சந்தேகங்கள் கேள்விகளுக்கான தெளிவுரைகள்: 

 

வரிசை எண்

கேள்வி

தெளிவாக்கம்

1.       

ஜூலை 18, 2022 முதல் அமலுக்கு வந்த உறையிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எவை?

கொள்கலன்களில் ஏற்கனவே உணவுப் பொருட்கள் அடைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தயாரிப்பின்  பெயரோ  அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தயாரிப்பின் பெயரோ பொறிக்கப்பட்ட குறிப்பிட்ட பொருட்களுக்கு ஜூலை 18, 2022க்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. ஜூலை 18, 2022 முதல் இந்த விதியில்  மாற்றம் செய்யப்பட்டு, முன்கூட்டியே உறையிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். உதாரணமாக, கொள்கலனில் அடைக்கப்பட்ட தயாரிப்பின் பெயரில் உள்ள பருப்பு வகைகள், அரிசி, கோதுமை முதலிய தானியங்கள், மாவு வகைகள் உள்ளிட்டவற்றிற்கு இதற்கு முன்பு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. 18.7.2022 முதல் இதுபோன்ற பொருட்கள் முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்டிருந்தால் அவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இது தவிர தயிர், லஸ்ஸி, பொறி போன்ற இதர பொருட்கள் இவ்வாறு முன்கூட்டு உறையிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டிருந்தால் ஜூலை 18, 2022 முதல் அவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

 

பெயர் பொறிக்கப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கும் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றம், இதுவாகும்.

2.       

இவ்வாறு முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் மாவு வகைகள் போன்ற உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதன் நோக்கம் என்ன?

சட்டமுறை எடையளவு சட்டத்தின் 2-வது பிரிவின் முதல் உட்பிரிவில் தெரிவித்துள்ளதாவது:

 

1.    முன்கூட்டியே உறையிடப்பட்ட பொருள் என்பது, கொள்முதல் செய்பவரின் இடையீடு இல்லாமல் எந்த ஒரு நிலையில் இருந்து, சீல் செய்யப்பட்டாலோ, அல்லது செய்யப்படாவிட்டாலோ, அந்த பொருள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அளவில் அடைக்கப்பட்டதாகும்.

எனவே இது போன்ற பொருட்கள் கீழ்காணும் அம்சங்களை பெற்றிருந்தால் அவை மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்:

(i)         முன்கூட்டியே  உறையிடப்பட்டிருந்தால்

(ii)        சட்டமுறை எடையளவு சட்டம் 2009இல் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கும் ஆணைகளுக்கு உட்பட்டிருந்தால்

 

எனினும் இது போன்ற பொருட்கள் சட்டமுறை எடையளவு சட்டத்திற்கு உட்படாமல் இருந்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கான முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களாக வகைப்படுத்தப்படாது.

 

உணவுப் பொருட்களைப்  (பருப்பு வகைகள், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், மாவு வகைகள் முதலியவை), பொறுத்தவரை, சட்டமுறை எடையளவு (உறையிடப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011இன் விதி 3 கீழ், 25 கிலோ (அல்லது 25 லிட்டர்) வரையிலான அளவில் உள்ள பொருட்கள், சட்டம் மற்றும் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள், சட்டமுறை எடையளவு சட்டம் 2009 இன் கீழ் முன்கூட்டியே உறையிடப்பட்ட பொருள் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படும்.

3.       

சட்டப்பூர்வ அளவை முறை சட்டம் மற்றும் விதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள பல்வேறு விதி விலக்குகள் தற்போதைய நடைமுறையில் எந்தவிதமான பயனை ஏற்படுத்தும்?

 25 கிலோ கிராம் அல்லது 25 லிட்டருக்கும் அதிக அளவுள்ள பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் – பருப்புகள், பயறு வகைகள், மாவு போன்றவை சட்டப்பூர்வ அளவை முறை (பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011-ல் அத்தியாயம்-II துணை விதி 3(a)-ன் கீழ் அறிவிப்பு தேவைப்படவில்லை. இதனால் இத்தகைய குறிப்பிட்ட முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு 25 கிலோ கிராம் அல்லது இதற்கு சமமான அளவுக்கு குறைவாக இருக்கும் போது ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்தும்.

 

 விளக்கம்: முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மைதா, 25 கிலோ கிராம் விற்பனை செய்யும் போது நுகர்வோர் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இருப்பினும் 30 கிலோ கிராமுக்கு இத்தகைய பொருட்கள் விநியோகிக்கப்பட்டால் அவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

 எனவே பருப்பு வகைகள், பயறுவகைகள், மாவு போன்றவை ஒரே பேக்கிங் ஆக 25 கிலோ கிராம் அல்லது 25 லிட்டருக்கும் அதிகமாக இருந்தால்  அதற்கு முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட மாட்டாது.

4.       

அதிகளவிலான சில்லரை வியாபார பேக்கேஜ்-களுக்கு, உதாரணமாக, ஒரு பேக்கேஜில் ஒவ்வொன்றும் 10 கிலோ கிராம் எடை கொண்ட 10 மாவு பாக்கெட்டுகள் உள்ள போது, ஜிஎஸ்டி பொருந்துமா?

ஆம். ஒவ்வொன்றும் 10 கிலோ கிராம் எடையுடன் 10 பேக்கேஜூகள் ஒரே பெரிய பேக்கேஜில் நுகர்வோருக்கு விற்கப்பட்டால் அதற்கு ஜிஎஸ்டி வரி பொருந்தும். இத்தகைய பேக்கேஜ் உற்பத்தியாளரால் விநியோகிப்பாளர் மூலம் விற்கப்படலாம். 10 கிலோ கிராம் எடை கொண்ட தனித்தனி பாக்கெட்டுகள்  சில்லரையில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படலாம்.

 இருப்பினும் 50 கிலோ கிராம் அரிசி உள்ள ஒரே பேக்கேஜ் இருந்தால் சட்டப்பூர்வமான அளவை முறை (பேக் செய்யப்பட்ட பொருட்கள்) விதிகள் 2021-ன் துணைவிதி 24 ஒட்டுமொத்த பேக்கேஜ் செய்ததற்கான அறிவிப்பை கட்டாயமாக்கியுள்ள போதும், அது முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிக்கு உரியதாக கருதப்படமாட்டாது.

(I)       “முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட பொருள்” என்றால், சீலிடப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும்  அதன் தன்மை எதுவாயினும் வாங்குபவர் முன்னிலையில் இல்லாமல் பேக் செய்யப்பட்டதாகும். எனவே அதற்குள் இருக்கும் பொருள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அளவுடையதாகும்.

எனவே இத்தகைய குறிப்பிட்ட வகையிலான பொருட்கள் விநியோகம் கீழ்காணும் இரண்டு வகைமைகளில் ஜிஎஸ்டிக்கு உரியதாகும்.

(i)       அது முன்கூட்டியே பேக் செய்யப்பட்டிருப்பது

(ii)       சட்டப்பூர்வ அளவை முறை சட்டம் 2009 (2010-ன் 1) –ல் உள்ள விதிகளின் கீழ் அறிவிப்புகள் செய்யப்பட்டிருப்பதை தேவையாக கொண்டுள்ளது.

இருப்பினும் இத்தகைய குறிப்பிட்ட பொருட்கள் பேக் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டால் அதற்கு சட்டப்பூர்வ அளவை முறை சட்டம் 2009 (2010-ன் 1) –ல் உள்ள விதிகளின் கீழ் அறிவிப்புகள் தேவைப்படாது. இது முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட அல்லது, முத்திரையிடப்பட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உரியதாக கருதப்பட மாட்டாது.

இந்நிலையில் பருப்புவகைகள், பயறு வகைகள் போன்றவையும், அரிசி, கோதுமை, மாவு போன்றவையும் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சட்டப்பூர்வ அளவை முறை சட்டம் 2009 மற்றும் அவற்றின் விதிமுறைகளின் கீழ்  முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட பொருள் என்ற விளக்கத்தின் கீழ் வருவதாக இருக்கும்.  இத்தகைய முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட பேக்கேஜிகள் சட்டப்பூர்வ அளவை முறை (பேக் செய்யப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011, துணை விதி 3(a)-ன் கீழ் 25 கிலோ கிராம் அல்லது 25 லிட்டர் வரை இருந்தால் இந்த சட்டம் மற்றும் விதிகளின்படியான விலக்குகள்  பெறத்தக்கதாகும்.

 

இத்தகைய விநியோகத்தின் போது எந்த கட்டத்தில் ஜிஎஸ்டி பொருந்தும், அதாவது சில்லரை வியாபாரிக்கு  விற்பனை செய்கின்ற மொத்த வியாபாரிக்கு தயாரிப்பாளர் அல்லது உற்பத்தியாளரால் விற்கப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி பொருந்துமா?

 இத்தகைய பொருட்கள் எவருக்கு விநியோகிக்கப்பட்டாலும், அதாவது உற்பத்தியாளர் விநியோகஸ்தருக்கு அல்லது விநியோகஸ்தர் / முகவர் சில்லரை வியாபாரிக்கு அல்லது சில்லரை வியாபாரி நுகர்வோருக்கு வழங்கும் போது ஜிஎஸ்டி பொருந்தும். மேலும் உற்பத்தியாளர் / மொத்த வியாபாரி / சில்லரை வியாபாரி ஆகியோர் அவர்களின் விநியோகஸ்தரால் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மீதான கூடுதல் பிடித்தத்தை குறைத்து கொள்ளும் அம்சம் உள்ளது.

6.       

25 கிலோ அல்லது  25 லிட்டர் வரையிலான பேக்கேஜில் சில்லரை வியாபாரியால்  வாங்கப்பட்ட இத்தகைய பொருள்களை தமது கடையில் குறைந்த அளவுகளில் விற்கும் போது வரி செலுத்த வேண்டுமா?

முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட  மற்றும் முத்திரையிடப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தும். எனவே முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட பொருட்கள் விநியோகஸ்தர் / உற்பத்தியாளரால் சில்லரை வியாபாரிக்கு விற்கப்படும் போது ஜிஎஸ்டி பொருந்தும். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருந்தால் இத்தகைய பேக்கேஜில் இருந்து குறைந்த அளவுக்கு  சில்லரை வியாபாரி விநியோகம் செய்யும் போது,  அத்தகைய விநியோகம் ஜிஎஸ்டி வரிக்கான பேக் செய்யப்பட்ட பொருளின் விநியோகமாக இருக்காது.

7.       

இத்தகைய பேக் செய்யப்பட்ட பொருட்கள் தொழில்துறையினருக்கு அல்லது பிற நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டால் அதற்கு வரி செலுத்த வேண்டுமா?

பேக் செய்யப்பட்ட பொருட்கள் தொழில்துறை அல்லது பிற நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் போது சட்டப்பூர்வ அளவை முறை சட்டத்தின் துணைவிதி 3(c) –ன்படி, விலக்கு பெறும். எனவே இத்தகைய முறையில் விநியோகிக்கப்பட்டால் ஜிஎஸ்டிக்கான முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட அல்லது  முத்திரையிடப்பட்டதாக கருதப்படாது.

8.       

‘எக்ஸ்’ என்பவர் அரிசி மில் உரிமையாளர். இவர் 25 கிலோ உள்ள அரிசி பையை விற்பனை செய்கிறார். ஆனால் சட்டப்பூர்வ அளவை முறை சட்டத்தின் கீழ் தேவைப்படுகின்ற அறிவிக்கையை அவர் வெளியிடவில்லை. இந்நிலையில் அந்த விற்பனை முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட பொருளாக கருதப்பட்டு ஜிஎஸ்டி விதிக்கப்படுமா?

ஆம். சட்டப்பூர்வ அளவை முறை சட்டத்தின் கீழ் அறிவிக்கை வெளியிடாததால் இத்தகைய பேக்கேஜ்கள் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும்  முத்திரையிடப்பட்ட பொருளாக கருதப்பட்டு ஜிஎஸ்டி விதிக்கப்படும். இத்தகைய பேக்கெட்டுகளை விநியோகிக்கும் போது எக்ஸ் என்ற மில் உரிமையாளர் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

9.       

வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா?

சட்டப்பூர்வ அளவை முறை (பேக் செய்யப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011-ன் 26-வது விதி சில விதிவிலக்குகளை  கொண்டிருக்கின்றன. எனவே இந்த முறையில் விதி விலக்குகளை பெற்றுள்ள பொருட்கள் ஜிஎஸ்டி விதிக்கத்தக்க முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட பொருட்களாக கருதப்பட மாட்டாது.

 

****(Release ID: 1842312) Visitor Counter : 639