உள்துறை அமைச்சகம்

இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் சஞ்சிகையால் “2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதற்காக நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 14 JUL 2022 11:47AM by PIB Chennai

இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் சஞ்சிகையால் “2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதற்காக நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     “இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் சஞ்சிகையால் “2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!” என்று திரு அமித் ஷா தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

     “2001-க்குப் பின் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையால், குஜராத்தில் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.  அகமதாபாதில் சபர்மதி நதி முகத்துவாரம் அல்லது அறிவியல் நகர் என எதுவாயினும் திரு மோடி எப்போதும் அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்குவதையும், இந்தியாவை எதிர்காலத்திற்கு தயார் செய்வதையும் வலியுறுத்தினார்” என்று திரு ஷா கூறியுள்ளார்.  

*****



(Release ID: 1841440) Visitor Counter : 201