திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இந்தியா முழுவதும் 200 இடங்களில் பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளா நடத்தப்படும்
Posted On:
10 JUL 2022 1:28PM by PIB Chennai
வேலைவாய்ப்பு மற்றும் செய்முறைப் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜுலை 11, 2022 அன்று, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளாவை நடத்த உள்ளது. இதுவரை, 1,88,410 விண்ணப்பதாரர்கள், தொழிற்பழகுனர் மேளாவில் பங்கேற்க விண்ணப்பித்து, அவர்களில் 67,035பேருக்கு பயிற்சிக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் மேளா-வில் 36 துறைகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 500 வெவ்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்கேற்று, தொழிற் பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் , 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மேளாவை நடத்தி, தொழிற்பழகுனர் பயிற்சி மூலம், விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்புக்கு உதவ உள்ளது.
குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றிருப்பதுடன், திறன் பயிற்சி சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்துள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மேளாவில் பங்கேற்கலாம். மேலும், வெல்டிங், மின்சார பணியாளர் வேலை, வீட்டு பராமரிப்பு, அழகுக்கலை, மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிற் பிரிவுகளில், தங்களுக்குப் பிடித்தமான பிரிவை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம். இந்தப் பயிற்சியை முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, NCVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகார சான்றிதழைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840532
***
(Release ID: 1840609)
Visitor Counter : 283