பிரதமர் அலுவலகம்
' எனது நண்பர் அபே சான்' - ஷின்சோ அபேவு மறைவுக்கு பிரதமர் அஞ்சலி
प्रविष्टि तिथि:
08 JUL 2022 9:33PM by PIB Chennai
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"திரு. அபேயின் மறைவில், ஜப்பானும் உலகமும் ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வையாளரை இழந்துவிட்டன. மேலும், நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன்.
என் நண்பர் அபே சானுக்கு அஞ்சலி..."
"நான் அபே சானை முதன்முதலில் 2007 இல் சந்தித்தேன், அதன் பிறகு, நாங்கள் பல மறக்கமுடியாத தொடர்புகளை வைத்திருந்தோம். அவை ஒவ்வொன்றையும் நான் போற்றுவேன். அபே சான் இந்தியா-ஜப்பான் உறவை ஊக்குவித்தார். புதிய இந்தியா அதன் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும்போது ஜப்பான் அருகே இருப்பதை அவர் உறுதி செய்தார்’’.
"உலகளாவிய தலைமைத்துவத்தைப் பொறுத்த வரையில், அபே சான் அவரது காலத்தை விட முன்னேறிச் சென்றார். குவாட், ஆசியான் தலைமையிலான மன்றங்கள், இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி, ஆசியா-ஆப்பிரிக்கா வளர்ச்சி பாதை மற்றும் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி அனைத்தும் அவரது பங்களிப்புகளால் பயனடைந்தன. "
*********
(रिलीज़ आईडी: 1840325)
आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Odia
,
Telugu
,
Urdu
,
English
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam