பிரதமர் அலுவலகம்

முதலாவது "அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவில்" பிரதமர் பங்கேற்பு

Posted On: 08 JUL 2022 9:12PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற முதலாவது அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி , சிங்கப்பூர் அரசின் மூத்த அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று இந்த நிகழ்வின் போது பிரதமர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று காலமான ஜப்பானின் முன்னாள் பிரதமர் திரு ஷின்சோ அபே உடனான தனது நெருங்கிய நட்பை நினைவு கூர்ந்தார். திரு அபேக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இன்று தமக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் தாங்க முடியாத வேதனையின் நாள் என்று கூறினார். திரு அபேவை இந்தியாவின் நம்பகமான நண்பர் என்று அழைத்த பிரதமர், திரு ஷின்சோ அபேயின் ஆட்சிக் காலத்தில் இந்தியா-ஜப்பான் உறவுகளின் வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டினார். ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் மூலம், திரு அபே இன்னும் பல ஆண்டுகளாக இந்தியர்களின் இதயங்களில் நிலைத்திருப்பார் என்றார் அவர்.

தமது மற்றொரு நண்பரான அருண் ஜெட்லியை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். கடந்த நாட்களை நினைவுகூரும் போது, அவர்களைப் பற்றிய பல விஷயங்கள், அவை தொடர்பான பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அவருடைய பேச்சுத்திறனைக் கண்டு அனைவரும் வியந்தோம். அவரது ஆளுமை பன்முகத்தன்மை நிறைந்தது என்று கூறிய பிரதமர்,  திரு ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தினார்.

சிங்கப்பூர் அரசின் மூத்த அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்தினம், அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் நன்றி தெரிவித்தார். இன்றைய கொள்கை வகுப்பாளர்களின் சவால்கள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளை விளக்கிய பிரதமர், “அரசின்  தலைவராக 20 ஆண்டுகால அனுபவத்தின் சாராம்சம் அனைவரையும்  சேர்க்காமல், உண்மையான வளர்ச்சி சாத்தியமில்லை. மேலும், வளர்ச்சி இல்லாமல் உள்ளடக்கும் இலக்கையும் நிறைவேற்ற முடியாதுஎன்பதுதான்" என்றார். அதனால்தான், ' அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் வழியை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் அனைவரையும் சேர்க்க முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளில் உலகிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகம் மற்றும் சேர்க்கையின் அளவு உள்ளது என்று கூறிய அவர்,  9 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு எரிவாயு இணைப்புகள், ஏழைகளுக்கு 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள், 45 கோடிக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள், ஏழைகளுக்கு 3 கோடி உறுதியான வீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பிரதமர் பட்டியலிட்டார்.

 ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 50 கோடி மக்களுக்கும், கடந்த 4 ஆண்டுகளில் இலவச சிகிச்சையைப் பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.

  “2014ஆம் ஆண்டுக்கு முன், 10 ஆண்டுகளில் 50 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. அதேசமயம், கடந்த 7-8 ஆண்டுகளில், இந்தியாவில் 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன, இது முன்பை விட 4 மடங்கு அதிகமாகும். மேலும், கடந்த 7-8 ஆண்டுகளில் இந்தியாவில் இளங்கலை மருத்துவ இடங்கள் 75% அதிகரித்துள்ளன. இப்போது இந்தியாவில் ஆண்டு மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தத் துறையின் வளர்ச்சியில் உள்ளடங்கும் திட்டத்தின் தாக்கத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் நாம் காணலாம்’’, என்றார் பிரதமர்.

************



(Release ID: 1840320) Visitor Counter : 127