மத்திய அமைச்சரவை

பேரிடர் மீட்சி கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI)யை ‘சர்வதேச அமைப்பு’-ஆக வகைப்படுத்தவும், ஐநா (முன்னுரிமை & தற்காப்பு) சட்டம், 1947-ன்கீழ், விதிவிலக்குகள், தற்காப்பு மற்றும் முன்னுரிமைகளை வழங்குவதற்கு CDRI-யுடன் தலைமையக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 JUN 2022 3:45PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பேரிடர் மீட்சி கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI)யை ‘சர்வதேச அமைப்பு’-ஆக வகைப்படுத்தவும், ஐநா (முன்னுரிமை & தற்காப்பு) சட்டம், 1947-ன்கீழ், விதிவிலக்குகள், தற்காப்பு மற்றும் முன்னுரிமைகளை வழங்குவதற்கு CDRI-யுடன் தலைமையக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

     இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து 31 நாடுகள், 6 சர்வதேச அமைப்புகள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் இந்த CDRI-யில் உறுப்பினராக இணைந்துள்ளன. பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளை உறுப்பினராக சேர தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் CDRI தனது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837893

**************



(Release ID: 1838019) Visitor Counter : 218