பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி-7 உச்சிமாநாட்டின்போது இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 27 JUN 2022 9:22PM by PIB Chennai

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் மேதகு திரு. ஜோகோ விடோடோவை 27 ஜூன், 2022 அன்று சந்தித்துப் பேசினார்.

தற்போதைய ஜி-20க்கு இந்தோனேசியா தலைமை வகிப்பதற்காக திரு விடோடோவுக்கு, பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், வரவிருக்கும் ஜி-20க்கு இந்தியா தலைமை வகிப்பது குறித்தும் விவாதித்தனர்.

பரஸ்பர தொடர்புடைய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

*****


(Release ID: 1837473) Visitor Counter : 144