பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின்போது ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 28 JUN 2022 8:01AM by PIB Chennai

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின்போது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமிகு. உர்சுலா வான் டெர் லேயனை 27 ஜூன் 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

ரைசினா சந்திப்பிற்காக ஏப்ரல் 2022 இல் தில்லிக்கு தலைவர் திருமிகு. உர்சுலா வான் டெர் லேயன் வருகை தந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் புவியியல் குறியீடு ஒப்பந்தங்கள் தொடர்பான  பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியது குறித்து இரு தலைவர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். டிஜிட்டல் ஒத்துழைப்பு, பருவநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் தொழில்நுட்பம் & புது கண்டுபிடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒத்துழைப்புகளை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

இரு தலைவர்களும் தற்போது நடந்துவரும் உலகளாவிய மற்றும் பிராந்திய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

*****


(रिलीज़ आईडी: 1837467) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam