பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாவகத் மலையில் மறுசீரமைக்கப்பட்ட ஶ்ரீ காளிகா மாதா கோவில் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 18 JUN 2022 3:00PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் அவர்களே, காளிகா மாதா கோயில் அறக்கட்டளை தலைவர் திரு சுரேந்திர பாய் பட்டேல் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!
இன்றைக்கு இந்தக் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு கிடைத்த நல் வாய்ப்பு.  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாவகத் மலை உச்சியில் இன்று மீண்டும் கொடியேற்றப்பட்டுள்ளது.  இந்த ‘உயரப்பறக்கும் கொடி‘  நமது நம்பிக்கை மற்றும் ஆன்மீக அடையாளமாக மட்டுமின்றி, பல நூற்றாண்டுகள் மாறலாம், யுகங்கள் மாறலாம், ஆனால் நம்பிக்கை என்றும் புனிதமானது என்பதற்கு சிறந்த அடையாளமாகத் திகழ்கிறது. வரவிருக்கும் ‘குப்த் நவராத்திரி‘-க்கு முன்பாக இந்த புதுப்பிப்புப் பணிகள் முடிவடைந்திருப்பது ‘சக்தி‘  ஒருபோதும் குறைந்துவிடவோ அல்லது மாயமாகிவிடவோ இல்லை  என்பதற்கான அறிகுறி..  
இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார பெருமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய இந்தியா,  அதன் பண்டைக்கால அடையாளங்களுடன், நவீன எதிர்பார்ப்புகளுடன் பெருமிதம் கொண்டதாக திகழ்கிறது.   நம்பிக்கைக்கான மையங்களுடன், நமது முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளும் உருவெடுக்கிறது, அந்தப் பயணத்தின் ஒரு பகுதி தான் இந்த மாபெரும் கோவில்.   இந்தக் கோவில்,  அனைவரும் இனைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்பதற்கான அடையாளமாகத் திகழ்கிறது.. 
 அன்னையே, மக்கள் சேவகன் என்ற முறையில் மேலும் அதிக ஆற்றல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்ற என்னை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.  என் வாழ்வில்,  எத்தகைய வலிமை, எந்த வகையில் எனக்குக் கிடைத்தாலும், அதனை தந்த நாட்டிலுள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்பேன்..  
மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இடங்களை மேம்படுத்துவதன் மூலம்,  இந்தப் பகுதியில் சுற்றுலா, வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இப்பகுதியின் கலை மற்றும் கைவினைத்திறன் பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும்.   பஞ்சமஹால், பிரபல இசைக் கலைஞர் மேஸ்ட்ரோ பைஜு பாவரா பிறந்த பூமியாகும். எங்கு பாரம்பரியமும் கலாச்சாரமும் வலிமை பெறுகிறதோ, அங்கு திறமையும் செழித்து வளரும்.
பூபேந்திர பட்டேல் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியையும், அறக்கட்டளையையும், குஜராத் அரசையும் நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் நன்றி.

*******


(Release ID: 1835278) Visitor Counter : 203