உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் ஒன்றைரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா நன்றி

प्रविष्टि तिथि: 14 JUN 2022 2:44PM by PIB Chennai

மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் ஒன்றைரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

     மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர்பதிவில், “புதிய இந்தியாவின் அடிப்படை இளைஞர் சக்தியாகும். அவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரு.மோடி தொடர்ச்சியாக பாடுபட்டு வருகிறார்.  அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை விரைந்து பணியமர்த்த வேண்டும் என்ற திரு.மோடியின் உத்தரவு இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை கொண்டுவரும்.

     அனைத்து அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் 10 லட்சம் இளைஞர்களை பணியமர்த்த வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கு இணங்க மத்திய உள்துறை அமைச்சகம் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

******


(रिलीज़ आईडी: 1833874) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Telugu