பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

‘தொழில்நுட்பத்தால் அதிகாரம் பெற்றுள்ள இந்தியாவின் 8 ஆண்டுகள்’ பற்றிய விவரங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 JUN 2022 4:10PM by PIB Chennai

கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரத்தை சிறப்புடையதாக்க ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பமும், புதிய கண்டுபிடிப்பும் எவ்வாறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்பது பற்றிய முன்முயற்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

narendramodi.in என்ற தமது இணையதளத்திலும், MyGov ட்விட்டர் பக்கத்திலும் கட்டுரைகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“தொழில்நுட்பம் என்பதன் பொருள் மாபெரும் வெளிப்படைத்தன்மை.

தொழில்நுட்பம் என்பதன் பொருள் ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ விரிவுபடுத்துவது.

கடந்த 8 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் மேற்கொண்ட எண்ணற்ற முயற்சிகள் உங்களை மகிழ்விக்கும் #8YearsOfTechPoweredIndia”

“அரசு நிர்வாகத்திற்கும், ஏழைகளுக்கு சேவைசெய்யவும், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பயன்பாட்டு பாதையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் அனைத்து துறைகளையும் சிறப்பானதாக நாங்கள் மாற்றியிருக்கிறோம்.  முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் தலையீடுகளில் சிலவற்றை பற்றி இங்கே படியுங்கள் #8YearsOfTechPoweredIndia”

                                                       ***************


(रिलीज़ आईडी: 1832923) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Odia , Assamese , Telugu , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati