மத்திய அமைச்சரவை

சுற்றுச்சூழல் ஆய்வுக்கான ஜப்பானின் தேசிய நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஆர்யபட்டா ஆய்வு நிறுவனம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 JUN 2022 4:49PM by PIB Chennai

சுற்றுச்சூழல் ஆய்வுக்கான ஜப்பானின் தேசிய நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஆர்யபட்டா ஆய்வு நிறுவனம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காற்றின் தரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து கூட்டு ஆராய்ச்சியை நடத்தவும், அமலாக்கவும், இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.  மேலும், கடந்த காலத்தில், வேறு எந்த வெளிநாட்டு அமைப்புடனும் இது போன்ற ஆராய்ச்சிக்கு ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் எதையும் செய்துகொண்டதில்லை.

அறிவியல் கருவிகளின் கூட்டுப்பயன்பாடு மற்றும் இயக்கம், கண்காணிப்பு முறைகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம், கூட்டான கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகள், ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்துடன் முனைவர் பட்டத்திற்கான மாணவர்கள் உட்பட ஆய்வாளர்கள் பரிமாற்றம், கூட்டான அறிவியல் பயிலரங்குகள் / கருத்தரங்குகள் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் மூலம் சாத்தியமாகும் செயல்பாடுகளாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832171

-------(Release ID: 1832292) Visitor Counter : 163