பிரதமர் அலுவலகம்

‘விரைவு உள்கட்டமைப்பின் எட்டு ஆண்டுகள்’ பற்றிய தகவல்களை பிரதமர் பகிர்வு

Posted On: 06 JUN 2022 3:00PM by PIB Chennai

 #8YearsOfInfraGati என்ற ஹேஷ்டேக்கின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி பற்றிய தகவல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“மேம்பட்ட வான் இணைப்பு.
கூடுதல் நகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதிகள்.
உள்கட்டமைப்பிற்கு அதிக உந்துதல்.
ரயில்வேயில் நவீனமயமாக்கல்.
நமது மக்களுக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை இந்தியா எவ்வாறு கட்டமைக்கிறது என்பது பற்றிய ஒரு பார்வை. #8YearsOfInfraGati”

கடந்த எட்டு ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்பட்டுள்ள வேகமான வளர்ச்சி, புதிய இந்தியாவின் ஆற்றலை எடுத்துரைக்கிறது. சாலைகள், விமான நிலையங்கள், ரயில் உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்களின் கட்டமைப்போடு பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் வாயிலாக இந்தத் துறை புதிய உத்வேகத்தைப் பெற்று வருகிறது. #8YearsOfInfraGati”

***************


(Release ID: 1831923)(Release ID: 1831992) Visitor Counter : 171