பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிம்லாவில் ‘ஏழைகள் நல மாநாட்டில்’ பிரதமர் உரை

"130 கோடி இந்தியர்களைக் கொண்ட இந்தக் குடும்பம்தான் என்னுடையது, என் வாழ்வில் நீங்கள்தான் எல்லாமே, இந்த வாழ்க்கையும் உங்களுக்காகவே"

"அனைவரின் நலனுக்காகவும், ஒவ்வொரு இந்தியனின் கெளரவத்திற்காகவும், ஒவ்வொரு இந்தியனின் பாதுகாப்பு, முன்னேற்றம், மகிழ்ச்சி, அமைதியான வாழ்க்கைக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்ற உறுதிமொழியை மீண்டும் அளிக்கிறேன்"

“சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகள் நலம் ஆகியவை மக்களுக்கான அரசின் அர்த்தத்தை மாற்றியுள்ளது”

"முன்பு நிரந்தரம் என்று கருதப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண அரசு முயற்சிக்கிறது"

“எங்களது அரசு முதல் நாளிலில் இருந்து ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தலை தொடங்கியுள்ளது”

"நாங்கள் உருவாக்க உழைத்து கொண்டிருப்பது புதிய இந்தியாவை உருவாக்குவதற்காகவே தவிர, வாக்கு வங்கிக்காக அல்ல"

“100% அதிகாரமளித்தல் என்பது பாகுபாடு மற்றும் மகிழ்ச்சிப்படுத்துதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். 100% அதிகாரமளித்தல் என்பது ஒவ்வொரு ஏழையும் அரசின் திட்டங்களின் முழுப் பலனையும் பெறுவதாகும்”

“புதிய இந்தியாவின் திறனுக்கான எ

Posted On: 31 MAY 2022 1:21PM by PIB Chennai

இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் தலைமையிலான அரசு பதவியேற்று

8  ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் இந்த புதுமையான நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொது மக்களுடன் தொடர்புள்ள மக்கள் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை பெறுவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 11-வது தவணை நிதியை பிரதமர் விடுவித்தார். சுமார் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விவசாய பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.21,000 கோடி அளவிலான தொகை அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி பிரதமர், நாடு முழுவதும் உள்ள இத்திட்டத்தின் பயனாளிகளுடனும் கலந்துரையாடினார். சிம்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் திரு ஜெய்
ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லடாக் பயனாளி திரு தஷி துண்டுப் என்பவருடன் உரையாடிய பிரதமர், லடாக்கிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அரசாங்கத் திட்டங்கள் குறித்த அவரது அனுபவத்தை கேட்டறிந்தார். ராணுவ வீரராக அவர் ஆற்றிய சேவைகளை பிரதமர் பாராட்டினார். பிரதமர் வீட்டுவசதித் திட்டம், கழிவறைகள், எரிவாயு இணைப்புகள் மற்றும் விவசாயம் போன்ற திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் எந்த சிக்கலையும் தான் சந்திக்கவில்லை என்று திரு தஷி துண்டப் கூறினார்.

பிரதமர் வீட்டுவசதித் திட்டம், உஜ்வாலா, தூய்மை இந்தியா, ஜல்ஜீவன் ஆகியவற்றின் பயனாளியான பீகாரைச் சேர்ந்த திருமதி லலிதா தேவி, தனது வாழ்க்கையை இந்த திட்டங்கள் கண்ணியமாகவும், எளிதாகவும் ஆக்கியிருப்பது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார். அவருக்கு கிடைத்துள்ள வீட்டின் மூலம் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற பல விஷயங்கள் நிறைவேறும் என்று பிரதமர் கூறினார்.

மேற்கு திரிபுராவைச் சேர்ந்த பயனாளியான திரு பங்கஜ் ஷனி, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, பிரதமர் ஏழைகள் நலன் ஆகியவற்றின் பயனாளியாவார். ஜல்ஜீவன் இயக்கம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் தான் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். பீகாரில் இருந்து குடிபெயர்ந்தாலும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு காரணமாக எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த, ஆயுஷ்மான் பாரத் பயனாளியான திருமதி சந்தோஷி, தனது அனுபவத்தை விவரித்தார். உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையம் மற்றும் இலவச பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் தனது வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வருவதாக அவர் கூறினார். அவரது சிறந்த தொடர்பு முறைக்காக அவரைப் பாராட்டிய பிரதமர், அவர் மிகவும் பிரபலமாக உள்ளதால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கிண்டலாக கூறினார்.

குஜராத் மாநிலம் மெஹ்சானாவைச் சேர்ந்த, பிரதமர் முத்ரா திட்டத்தின் பயனாளியான திரு அரவிந்த், பிரதமருடன் பேசுவதில் மகிழ்ச்சியடைந்தார், மேலும் அவரது மண்டப அலங்கார தொழிலை விரிவுபடுத்துவதற்கு முத்ரா திட்டம் வழிவகுத்தது என்றும், டிஜிட்டல் கட்டண திட்டத்தை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார். அரசின் திட்டங்கள் குறித்து தனது ஊழியர்களுக்குக் எடுத்துக் கூறி, வேலைவாய்ப்பை உருவாக்குவதாக அவரைப் பாராட்டினார்.  விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவரது மகளையும், பிரதமர்
வாழ்த்தினார்.

இமாச்சலப் பிரதேசம் சிர்மூரைச் சேர்ந்த பயனாளியான சாமா தேவி, பிரதமர் வீட்டுவசதித் திட்டம், ஆயுஷ்மான் திட்டம், விவசாயிகள் வருவாய் நிதி போன்றவற்றின் மூலம் பயனடைந்துள்ளார். அவரது நிலைமை மற்றும் விவசாய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விவாதித்தார். கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்த
முக்கியமான தருணத்தில் இமாச்சல பிரதேசத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் கிசான் திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற்றுள்ளதாக கூறி, விவசாயிகளுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். தமது அரசின் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பலன்களை வெளியிட்டதில் அவர் திருப்தி தெரிவித்தார். சிம்லாவிலிருந்து நாடு முழுவதும் பிரதமர் விவசாயிகள் வருவாய் நிதி திட்டத்தின் கீழ் நிதிப் பலன்களை விடுவித்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் மூலம் நேற்று பெற்றோர்கள் இருவரையும் கொரோனா தொற்றுநோயால் இழந்த குழந்தைகளுக்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதை குறிப்பிட்ட பிரதமர், தமது அரசின் 8 ஆண்டுகள் நிறைவு குறித்து தமது மனநிறைவை வெளியிட்டார். ஹிமாச்சல பிரதேசம், தமது கர்மபூமியாக இருப்பதால், இந்தத்தருணத்தில் அங்கு இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார். 130 கோடி குடிமக்களின் குடும்பத்தின் உறுப்பினராக மட்டுமே எப்போதும்
தம்மைப் பார்ப்பதாகவும், பிரதமராக பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். ஒரு கோப்பில் கையெழுத்து போடும்போது மட்டும் தான் பிரதமர். அந்த தருணம் முடிந்தவுடன், நான் இனி உங்கள் குடும்பத்தின் உறுப்பினரே தவிர, பிரதமர் இல்லை. 130 கோடி நாட்டு மக்களுக்கு பிரதான சேவகராகவும் நான் இருக்கிறேன். நாட்டிற்காக
என்னால் எதையும் செய்ய முடிகிறது என்றால், அது 130 கோடி நாட்டு மக்களின் ஆசியாலும், நல்வாழ்த்துக்களாலும் தான்” என்று உணர்ச்சிமேலிட பிரதமர் கூறினார். “130 கோடி குடிமக்களைக் கொண்ட எனது குடும்பத்தின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுடன் இணைந்திருக்கிறேன், "130 கோடி இந்தியர்களைக் கொண்ட இந்தக்
குடும்பம்தான் என்னுடையது, என் வாழ்வில் நீங்கள்தான் எல்லாமே, இந்த வாழ்க்கையும் உங்களுக்காகவே" என்றார். தமது அரசு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அனைவரின் நலனுக்காகவும், ஒவ்வொரு இந்தியனின் கெளரவத்திற்காகவும், ஒவ்வொரு இந்தியனின் பாதுகாப்பு, முன்னேற்றம், மகிழ்ச்சி, அமைதியான வாழ்க்கைக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்ற உறுதிமொழியை மீண்டும் அளிக்கிறேன் என்று அவர்
கூறினார்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலை அமைப்பின் இன்றியமையாத அங்கமாகக் கருதியது, பின்னர் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அரசாங்கம் அதற்கு அடிபணிந்தது, பின்னர் திட்டங்களுக்கான பணம் செல்வதற்கு முன்பே கொள்ளையடிக்கப்படுவதை நாடு பார்த்துக் கொண்டிருந்தது என்று பிரதமர் வேதனை தெரிவித்தார். தேவையுள்ள. ஜன்தன்-ஆதார் மற்றும் மொபைல் ஆகிய மூன்றின் காரணமாக இன்று பயனாளிகளின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாகச் சென்றடைகிறது என்றும் அவர் கூறினார். முன்பு சமையல் அறையில் புகையால் அவதிப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்த நிலையில், இன்று உஜ்வாலா திட்டத்தில்
எல்பிஜி சிலிண்டர்கள் பெறும் வசதி உள்ளது. முன்பு திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலம் இருந்த நிலையில் தற்போது ஏழைகளுக்கு கழிப்பறைகள் கண்ணியத்தை அளித்துள்ளன. முன்பு சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியாத நிலை இருந்தது, இன்று ஒவ்வொரு ஏழைக்கும் ஆயுஷ்மான் பாரத் ஆதரவு உள்ளது. முன்பு முத்தலாக் என்ற பயம்
இருந்தது, இப்போது உரிமைக்காகப் போராடும் தைரியம் வந்துவிட்டது என அவர் தெரிவித்தார். 

நலத்திட்டங்கள், நல்லாட்சி, ஏழைகளின் நலன் (சேவா சுஷாசன் அவுர் கரீப் கல்யாண்) ஆகியவை மக்களுக்கான அரசாங்கத்தின் அர்த்தத்தை மாற்றிவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இப்போது அரசு மக்களுக்காக பாடுபடுகிறது. பிரதமரின் வீட்டு வசதித்திட்டம், உதவித்தொகைகள் அல்லது ஓய்வூதியத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஊழலின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு நிரந்தரம் என்று கருதப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண அரசு முயற்சிக்கிறது
என்று கூறிய அவர், 9 கோடி போலிப் பெயர்களை பலன் பட்டியலில் இருந்து நீக்கியதன் மூலம் நேரடிப் பலன் பரிமாற்றம் திருட்டு மற்றும் கசிவு ஆகிய அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளது என்றார். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்ததன் மூலம் அவர்களது அன்றாடப் போராட்டம் குறைந்துள்ளது என பிரதமர் தெரிவித்தார். அதிகாரம் கிடைத்துள்ளதன் மூலம் தற்போது தனது வறுமையை அகற்ற ஏழைகள் புதிய ஆற்றலுடன் செயல்படுவதாக அவர் கூறினார். இந்தச் சிந்தனையுடன், எங்கள் அரசாங்கம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கத் தொடங்கியது. அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு கவலையையும் குறைக்க நாங்கள் முயற்சித்தோம் என்று அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் ஒன்று அல்லது மற்ற திட்டங்களால் பயனடைகின்றன என்பதை நான் பெருமையுடன் கூற முடியும், என்று அவர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஆயுதப் படைகளுக்கு அளித்த பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர், நான்கு தசாப்தங்களாக காத்திருந்து ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கியது இந்த அரசுதான் என்றார். ஹிமாச்சலத்தின் ஒவ்வொரு குடும்பமும் நிறைய பயனடைந்துள்ளது. வாக்கு வங்கி அரசியல் பல தசாப்தங்களாக நம் நாட்டில் நடந்து, நாட்டிற்கு பல கேடுகளைச் செய்துள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க நாங்கள்
உழைக்கிறோம், வாக்கு வங்கிக்காக அல்ல என்று அவர் தெரிவித்தார்.

100% பலன் 100% பயனாளிகளுக்கு சென்றடைய நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம் என்று பிரதமர் கூறினார். பயனாளிகள் திருப்தி அடைவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. 100% அதிகாரமளித்தல் என்பது பாகுபாடு மற்றும் மகிழ்ச்சிப்படுத்துதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். 100% அதிகாரமளித்தல் என்பது ஒவ்வொரு ஏழையும் அரசின் திட்டங்களின் முழுப் பலனையும் பெறுவதாகும் என்று அவர் கூறினார். நாட்டின் வளர்ந்து வரும் மதிப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், இந்தியா கட்டாயத்தின் பேரில் நட்பு கரம் நீட்டுவதில்லை. மாறாக உதவிக்கரம் நீட்டுகிறது. கொரோனா காலத்தில் கூட, நாம் 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளோம், என்றார்.

21-ஆம் நூற்றாண்டின் ஒளிமயமான இந்தியாவுக்காகவும், வரும் தலைமுறையினரின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் அடையாளம், பற்றாக்குறை அல்ல நவீனத்துவம். நமது திறமைக்கு முன்னால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. இன்றைய இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இன்று இந்தியாவில் வரலாறு காணாத அன்னிய முதலீடு குவிந்துள்ளது, இன்று இந்தியா ஏற்றுமதியிலும் சாதனை
படைத்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், நமது நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் பங்கேற்று தங்கள் பங்கை ஆற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று, கூறி உரையை நிறைவு செய்தார்.

                                                                                          ***************


(Release ID: 1829775) Visitor Counter : 213