பிரதமர் அலுவலகம்

ஐதராபாதில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியில் 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 26 MAY 2022 3:41PM by PIB Chennai

ஐதராபாதில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் உரையாற்றினார்.

இந்தக் கல்வி நிறுவனம் தற்போதைய புகழை அடைவதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் புகழாரம் சூட்டினார். 2021-ல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததை அவர் நினைவுகூர்ந்தார். அதன் பிறகு 50,000-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்திய வணிகவியல் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளனர். இன்று இந்த நிறுவனம் ஆசியாவிலேயே முதன்மையான வணிகவியல் பள்ளியாக விளங்குகிறது. இங்கிருந்து பட்டம் பெற்றவர்கள் முதன்மையான நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் என்றும்  நாட்டின் வணிகத்திற்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். இங்கு பயின்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கான புதிய தொழில்களை தொடங்கி யுனிகார்ன்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். “இது ஐஎஸ்பி-ன் சாதனை என்றும், இது ஒட்டு மொத்த தேசத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்” என்றும் அவர் கூறினார்.

ஜி-20 நாடுகளின் குழுவில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இன்று விளங்குவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். திறனறி செல்பேசி தரவுகள்படி இவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இணையதள பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையை நாம் பார்த்தால் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அவர் கூறினார். மேலும் உலகளாவிய சில்லரை வணிக குறியீட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய புதிய தொழில் தொடங்கும் நிலை இந்தியாவில் உள்ளது. உலகில் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது. இந்தியா தற்போது வளர்ச்சியின் மிகப் பெரிய மையமாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு மிக உயர்ந்த அளவாக இந்தியாவிற்குள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு பதிவாகியுள்ளது. உலகம் தற்போது இந்தியா என்பதன் பொருள் வணிகம் என்பதை உணர்ந்து வருகிறது.

இந்தியத் தீர்வுகளை அவ்வப்போது உலகம் அமலாக்கி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். எனவே “முக்கியமான நாளில் இந்தியா இன்று உள்ளபோது, உங்களின் தனிப்பட்ட இலக்குகளை நாட்டின் இலக்குகளோடு இணைப்பதற்கு உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

நாட்டில் எப்போதும் சீர்திருத்தத்தின் தேவை இருந்துள்ளது. ஆனால் அரசியல் மனஉறுதியில் குறைபாடும் எப்போதும் இருந்துள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ச்சியாக இருந்ததன் காரணமாக சீர்திருத்தங்களிலிருந்தும் பெரிய முடிவுகளை எடுப்பதிலிருந்தும் நாடு விலகி இருந்தது. 2014 முதல் நமது நாடு அரசியல் உறுதியை காண்கிறது. சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தீர்மானத்துடனும், அரசியல் உறுதியுடனும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது பொதுமக்கள் ஆதரவு உறுதி செய்யப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மக்களிடையே வரவேற்பு பெற்றதை அவர் உதாரணமாக எடுத்துக் காட்டினார்.

***************(Release ID: 1828552) Visitor Counter : 121