பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய வெள்ளிவிழா கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்

Posted On: 17 MAY 2022 1:40PM by PIB Chennai

அனைவருக்கும் வணக்கம்.. எனது அமைச்சரவையை சேர்ந்த அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, தேவுசின் சவுகான் அவர்களே, டாக்டர்.எல்.முருகன் அவர்களே, தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறையுடன் தொடர்புடைய அனைத்து தலைவர்களே, சகோதர, சகோதரிகளே..

இந்திய தொலைத்தொடர்பு துறையின் வெள்ளி விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான முன்னேற்ற பாதையை நோக்கி செல்வதும், புதிய இலக்குகளை நோக்கி பயணிப்பதும் ஒரு அற்புதமான நிகழ்வு. சிறிது நேரத்துக்கு முன்பு, 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தின் சோதனையை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது தொலைத்தொடர்பு துறையின் முக்கியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தன்னிறைவின் முக்கிய படியாகும்.

5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்க இளம்தலைமுறையினர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். 5ஜி தொழில்நுட்பம் ஆட்சி, வாழ்க்கையை எளிதாக்குதல், எளிய முறையிலான வணிகம் போன்றவற்றில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

மேலும், விவசாயம், கல்வி, உள்கட்டமைப்பு உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியையும், வசதியையும் உருவாக்குவதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்திய பொருளாதாரத்துக்கு 5ஜி தொழில்நுட்பம் 450 பில்லியன் டாலர்களை ஈட்டி தரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது இணையத்தின் வேகத்தை அதிகரிப்பது மட்டுமன்றி, நாட்டின் முன்னேற்ற வேகத்தையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். எனவே, 5ஜி தொழில்நுட்பத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர அரசுடன் தொழில்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

***************


(Release ID: 1828311)