பிரதமர் அலுவலகம்
கர்நாடகாவின் ஹூப்ளியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAY 2022 6:05PM by PIB Chennai
கர்நாடகாவின் ஹூப்ளியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். மேலும், உயரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “கர்நாடகாவின் ஹூப்ளியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் மிகுந்த வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்: பிரதமர் நரேந்திர மோடி”
“ஹூப்ளியில் ஏற்பட்ட விபத்தில் உயரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி”
--------
(வெளியீட்டு அடையாள எண்: 1828031)
வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam