சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக சுகாதார அமைப்பின் 75-ஆவது உலக சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை

Posted On: 23 MAY 2022 9:33PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் 75வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றினார்.

"இந்தியப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டபடி, தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கான சமமான அணுகலை செயல்படுத்த, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மிகவும் நெகிழ்வான உலகளாவிய சுகாதார பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க உலக சுகாதார அமைப்பை வலுப்படுத்த, ஒரு மீள்நிலை உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என அமைச்சர் மாண்டவியா வலியுறுத்தினார்.

இந்தியாவின் சட்டப்பூர்வ ஆணையத்தால் வெளியிடப்பட்ட நாட்டின் குறிப்பிட்ட உண்மையான தரவுகள் புறக்கணிக்கப்பட்ட அதிகமான இறப்புகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய நடவடிக்கை குறித்து இந்தியா தனது திகைப்பையும் கவலையையும் எழுப்புகிறது என அவர் குறிப்பிட்டார்.

அமைதி மற்றும் ஆரோக்கியத்தை இணைக்கும் இந்த ஆண்டின் கருப்பொருள் என்பது சரியான தருணம் பொருத்தமானது என்று இந்தியா நம்புகிறது, ஏனெனில் அமைதி இல்லாமல் நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு இருக்க முடியாது என டாக்டர் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1827759

----------



(Release ID: 1827932) Visitor Counter : 270