பிரதமர் அலுவலகம்
காது கேளாதோர் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
प्रविष्टि तिथि:
17 MAY 2022 9:12PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி, காது கேளாதவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திறனை வெளிப்படுத்திய இந்திய அணியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் கலந்துக் கொண்ட இந்திய அணியினர் இதுவரை இல்லாத அளவுக்கு திறம்பட செயல்பட்டனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
21-ம் தேதி காலை பிரதமர் மோடி தனது இல்லத்தில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்தியக் குழுவினரை சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியில், ”சமீபத்தில் முடிவடைந்த கேட்கும் திறனற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய இந்தியக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும், இந்தியக் குடிமக்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர்.
21-ம் தேதி காலை நான் எனது வீட்டில் இந்தியக் குழுவினர் அனைவரையும் சந்திக்க உள்ளேன்”.
***************
(रिलीज़ आईडी: 1826256)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam