பிரதமர் அலுவலகம்

மே 13 அன்று நடைபெறும் மத்தியப்பிரதேச புதிய தொழில் மாநாட்டின் போது மத்தியப்பிரதேச புதிய தொழில் கொள்கையைப் பிரதமர் வெளியிடுவார்

Posted On: 12 MAY 2022 12:34PM by PIB Chennai

2022 மே 13 அன்று மாலை 7 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்தூரில் நடைபெறும் மத்தியப்பிரதேச புதியதொழில் மாநாட்டின் போது மத்தியப்பிரதேச புதிய தொழில் கொள்கையை வெளியிடவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி புதியதொழில் தொடங்குவோரிடையே உரையாற்றுவார். புதியதொழில் சூழலை மேம்படுத்த ஊக்கப்படுத்தவும், உதவி செய்யவும் மத்தியப்பிரதேச புதியதொழில் இணையப்பக்கத்தையும் அவர் தொடங்கிவைப்பார்.

 அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த கொள்கை வகுப்போர், புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உள்பட புதிய தொழில்சூழலின் முக்கிய பிரமுகர்கள், மத்தியப் பிரதேச புதிய தொழில் மாநாட்டில் பங்கேற்பார்கள். கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் புதிய தொழில் தளத்தின் தலைவர்களுடன் உரையாடுவதற்கான விரைவான வழிகாட்டுதல் அமர்வு, புதிய தொழில்களுக்கு கொள்கை வகுப்போரால் எங்கே வழிகாட்டப்படும் என்பது பற்றிய புதிய தொழிலை எவ்வாறு தொடங்குவது அமர்வு, பல்வேறு நிதி சார்ந்த வழிமுறைகள் பற்றி தொழில்முனைவோர் எங்கே அறியமுடியும் என்பதற்கான நிதி சார்ந்த அமர்வு, முதலீட்டாளர்களுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பை புதிய தொழில்கள் எங்கே பெறுவது, நிதி பெறுவதற்கான அவர்களின் யோசனைகளை முன்வைப்பது பற்றிய ஆலோசனை அமர்வு, பொருள் மதிப்பு பற்றி பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ளுதல் மற்றும் மாநிலத்தில் புதிய தொழில் சூழலை மேம்படுத்துதல் பற்றிய  சூழல் ஆதரவு அமர்வு உள்ளிட்ட பலவகையான அமர்வுகள் இடம்பெறும். மாநாடு நிகழ்விடத்தில் புதிய தொழில் கண்காட்சியில் புதிய போக்குகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும்.

***************



(Release ID: 1824724) Visitor Counter : 188