பிரதமர் அலுவலகம்
ஃபிரான்ஸ் அதிபருடன் பிரதமரின் சந்திப்பு பற்றிய செய்தி அறிக்கை
Posted On:
04 MAY 2022 8:03AM by PIB Chennai
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா- நார்டிக் உச்சிமாநாட்டில் இருந்து திரும்பும் வழியில், மே 4, 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஃபிரான்ஸ் சென்றார்.
2. பாரிஸில், ஃபிரான்ஸ் அதிபர் மேதகு திரு இமானுவல் மேக்ரானை பிரதமர் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியதுடன், பிரதிநிதிக் குழு அளவிலான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். ராணுவம், விண்வெளி, கடல் பொருளாதாரம், சிவில் அணுசக்தி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தார்கள்.
3. பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலவரம் குறித்து இருவரும் கேட்டறிந்ததுடன், இந்திய-ஃபிரான்ஸ் கேந்திர கூட்டுமுயற்சியை உலகநாடுகளின் நன்மைக்கான உந்துசக்தியாக மாற்றுவதற்கு இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்தனர். பிரதமரின் ஃபிரான்ஸ் பயணம் இரு நாடுகளுக்கு இடையே மட்டுமல்லாமல், இரண்டு தலைவர்களுக்கு இடையே இருக்கும் வலுவான நட்பு மற்றும் நல்லுறவையும் எடுத்துக் காட்டியது.
4. வாய்ப்பு கிடைக்கும்போது கூடிய விரைவில் இந்தியாவிற்கு வருகை தருமாறு அதிபர் மேக்ரானுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
5. பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையை இங்கே காணலாம் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822818
******
(Release ID: 1822818)
(Release ID: 1822878)
Visitor Counter : 196
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam