பிரதமர் அலுவலகம்
இந்தியா – ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கியதன் 70 ஆவது ஆண்டு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
Posted On:
28 APR 2022 11:39AM by PIB Chennai
இந்தியா – ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கி இன்று 70 ஆண்டுகள் ஆவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராணுவம், பொருளாதாரம், மக்களுடன் மக்கள் தொடர்பு என அனைத்துத் துறைகளிலும் நமது உறவுகள் ஆழமாகியுள்ளன என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.
தொடர்ச்சியான டுவிட்டர் செய்திகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்தியா – ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கியதன் 70 ஆவது ஆண்டினை இன்று நாம் கொண்டாடும் நிலையில், ராணுவம், பொருளாதாரம், மக்களுடன் மக்கள் தொடர்பு என அனைத்துத் துறைகளிலும் நமது உறவுகள் ஆழமாகியிருப்பதைக் காண நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
“வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக எனது நண்பர் பிரதமர் கிஷிடா230 @kishida230 அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்த போது, கொவிடுக்கு பிந்தைய உலகில் நமது சிறப்பு ராணுவ மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தார். இந்த நோக்கத்தை நிறைவேற்ற பிரதமர் கிஷிடாவுடன் தொடர்ந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்”
***************
(Release ID: 1820878)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam