மத்திய அமைச்சரவை

மாற்றுத்திறனாளிகள் துறையில் இந்தியா - சிலி நாடுகளிடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 APR 2022 4:43PM by PIB Chennai

மாற்றுத்திறனாளிகள் துறையில் இந்தியா - சிலி நாடுகளிடையே  ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

 மாற்றுத்திறனாளிகள் துறையில் பரஸ்பரம் இருநாடுகளிடையேயான  புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா - சிலி இடையே  மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். இது இந்தியா மற்றும் சிலி இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

மாற்றுத்திறனாளிகள் துறையில் குறிப்பாக பின்வரும் துறைகளில் ஒத்துழைக்க விரும்புவதை வெளிப்படுத்தும் ஒரு கூட்டு ஒப்பந்தம் இவ்விரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது:

i)     மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளை வகுத்து சேவைகளைவழங்குதல் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

ii)    தகவல் மற்றும் அறிவு பரிமாற்றம்.

iii)    உதவி சாதன தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு.

iv)    மாற்றுத்திறனாளிகள் துறையில் பரஸ்பர ஆர்வமுள்ள திட்டங்களின் வளர்ச்சி.

v)    இயலாமை  குறித்து முன்கூட்டியே கண்டறிந்து  அதனை தடுப்பது.

vi)    நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற நிர்வாக ஊழியர்களின் கருத்துப் பரிமாற்றம்.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட தேவையான நிதியுதவியைப் பெற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. அத்தகைய நடவடிக்கைகளுக்கான செலவுகள் நிதி மற்றும் வளங்களின் கையிருப்பிற்கு  உட்பட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் இரு தரப்பிலும் பரஸ்பரம் தீர்மானிக்கப்படும். கூட்டு நடவடிக்கைகளுக்கான சர்வதேச பயணம் / தங்குமிடத்திற்கான செலவை வருகை தரும் நாடு ஏற்றுக்கொள்ளும், அதே வேளையில் கூட்டத்தை நடத்துவதற்கான செலவு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்  நாடு  ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்தியா - சிலி நாடுகளிடையேயான உறவுகள் பல்வேறு விவகாரங்களில் பொதுவான பார்வையின் அடிப்படையில் நட்பு ரீதியில் அமைந்துள்ளது.  2019-20-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக  ரீதியிலான உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக்  குறிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820511

***************



(Release ID: 1820619) Visitor Counter : 157