தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாக் கதைகள்’ என்று பொருள்படும் “ஆசாதி கி அம்ரித் கஹானியான்' எனும் குறு-வீடியோ தொடரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்
Posted On:
26 APR 2022 1:59PM by PIB Chennai
விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2021-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில், Netflix என்ற 'OTT' தளத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'சுதந்திரம் தொடர்பான அமிர்தப் பெருவிழாக் கதைகள்' என்ற குறு வீடியோ தொடரை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா, நெட்ஃபிக்ஸ் குளோபல் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் திருமதி பேல பஜாரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாற்றங்களை உருவாக்குகின்ற பெண்களான பித்தோராகரைச் சேர்ந்த பத்ம விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், திருமதி. பசந்தி தேவி, கோசி நதிக்கு புத்துயிர் அளிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அறியப்பட்டார். 2017-ஆம் ஆண்டில், ஐந்து நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் பெண்மணியான பத்மஸ்ரீ விருது பெற்ற திருமதி அன்ஷு ஜம்சென்பா மற்றும் நாட்டின் முதல் பெண் தீயணைப்பு வீரரான திருமதி ஹர்ஷினி கன்ஹேகர் ஆகியோரும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதுடன் விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்று கூறினார். நாட்டின் சுதந்திரத்திற்கான எண்ணங்கள் பெண் விடுதலையுடன் பின்னிப்பிணைந்துள்ளதாகவும், சமூகத்தில் ஒரே மாதிரியான மற்றும் தடைகளை எதிர்த்துப் போராட வேண்டிய பெண்களுக்கு ஆசாதி அல்லது சுதந்திரம் என்ற சொல் ஒரு பரந்த பொருளைக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக் குறியீட்டின் தனிச்சிறப்பு என்றும் அவர் கூறினார்.
இணைந்து செயல்படுவது குறித்து பேசிய திரு தாக்கூர், "இத்தகைய முயற்சிகள் மூலம் இந்தியர்களின் எழுச்சியூட்டும் கதைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கிலும், இந்தக் கதைகள் அதிக அளவிலான மக்களுக்கு அதிகாரமளித்து, அவர்களின் இலக்குகளை அடைய ஊக்குவிக்கும்" என்றார்.
பல்வேறு கருப்பொருள்கள் மற்றும் மாறுபட்ட கதைகளை முன்னிலைப்படுத்தும் நீண்ட கால கூட்டாண்மை என்று அவர் கூறினார். "பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த வளர்ச்சி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் உட்பட இருபத்தைந்து காட்சிப் படங்களை Netflix தயாரிக்கும். Netflix இயங்குதளம் அமைச்சகத்திற்க்கென இரண்டு நிமிட குறும்படங்களை தயாரிக்கும், அவை சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு தூர்தர்ஷன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்", என்றும் திரு.தாக்கூர் விவரித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820107
***************
(Release ID: 1820182)
Visitor Counter : 199
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam