பிரதமர் அலுவலகம்

மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை ஏப்ரல் 16 அன்று பிரதமர் திறந்துவைக்கவுள்ளார்

Posted On: 15 APR 2022 3:49PM by PIB Chennai

ஹனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை 2022 ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைப்பார்.

#ஹனுமன்ஜி4தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக,

நாடு முழுவதும் நான்கு திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது இரண்டாவது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்செயல்பாட்டின் முதலாவது சிலை வடக்குப் பகுதியில் 2010ல் சிம்லாவில் அமைக்கப்பட்டது. தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவும் பணி தொடங்கியிருக்கிறது.

 

**********



(Release ID: 1817061) Visitor Counter : 238