மத்திய அமைச்சரவை
பரவலாக்கப்பட்ட வீட்டு உபயோக கழிவுநீர் மேலாண்மையில், இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2022 3:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பரவலாக்கப்பட்ட வீட்டு உபயோக கழிவுநீர் மேலாண்மையில் ஒத்துழைப்பது தொடர்பாக, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளத் துறை, ஜப்பான் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செயல்பாட்டு நடைமுறை மற்றும் இலக்குகள்:
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும். ஒத்துழைப்பு தொடர்பான விரிவான நடவடிக்கைகளை இந்த குழு உருவாக்குவதுடன், அதன் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும்.
முக்கிய விளைவு:
பரவலாக்கப்பட்ட வீட்டு உபயோக கழிவுநீர் மேலாண்மை மற்றும் ஜோகாசோ (Johkasou) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை திறம்பட பயன்படுத்த, ஜப்பான் உடனான இந்த ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரை, ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், சுத்திகரித்து நன்னீராக பயன்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கழிவுநீரை சுத்திகரிக்கும் பணிக்கான மேம்பட்ட திட்டமிடலை மேற்கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816365
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1816412)
வருகையாளர் எண்ணிக்கை : 325
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam