சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19-ன் புதிய உருமாற்ற தொற்று குறித்த முக்கிய நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

Posted On: 12 APR 2022 11:57AM by PIB Chennai

கொவிட்-19-ன் புதிய எக்ஸ்இ உருமாற்ற தொற்று குறித்த முக்கிய நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். நாட்டில் கொவிட்-19 தொற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்த அவர், புதிய உருமாற்ற தொற்றுக்கள் குறித்த கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் ஆதார வளம் குறித்து ஆய்வு செய்த டாக்டர் மாண்டவியா, கொவிட் சிகிச்சைக்கு தேவைப்படும்  அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு நிலையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை அதே வேகத்துடன் கையாண்டு அனைத்து தகுதியானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 இந்தக் கூட்டத்தில் நித்தி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி கே பால், சுகாதாரத்துறை செயலர் திரு ராஜேஷ் பூஷன், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா உள்பட சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***************



(Release ID: 1816026) Visitor Counter : 155