பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
11 APR 2022 2:11PM by PIB Chennai
குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிழிழப்பு குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மிகுந்த துயரருற்றதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
******
(रिलीज़ आईडी: 1815637)
आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam