பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சிக்காக ஆலோசனைகளை பிரதமர் கோருகிறார்

Posted On: 08 APR 2022 9:11AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக பொது மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.

88-வது மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 24-ந் தேதி ஒலிபரப்பாக உள்ளது.

இது குறித்து, MyGov அழைப்பைப் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

“மனதின் குரல் மூலம் நாம் அடிமட்ட அளவில் மாற்றம் ஏற்படுத்துபவர்களின் அசாதாரணமான சாதனைகளை கொண்டாடி வருகிறோம். இத்தகைய உந்து சக்தியாக திகழும் வாழ்க்கைப் பயணங்களை நீங்கள் அறிவீர்களா? அவற்றை 24-ந் தேதி ஒலிபரப்பாகும் இம்மாத நிகழ்ச்சிக்காக பகிருங்கள். MyGov தளத்திலோ, NaMo செயலியிலோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ பகிர்ந்து கொள்ளுங்கள்.”

 

***



(Release ID: 1814649)


(Release ID: 1814724) Visitor Counter : 190