நிதி அமைச்சகம்
பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.18.60 லட்சம் கோடி அளவிற்கு 34.42 கோடிக்கும் அதிகமாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன
“பிரதமரின் முத்ரா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டியிருப்பதுடன், ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற பிரதமரின் தாரக மந்திரத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது: மத்திய நிதியமைச்சர்
“பிரதமரின் முத்ரா திட்டம் கடன் கிடைக்காத ‘முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களைச்’ சேர்ந்த வளர்ந்து வரும் எண்ணற்ற பயனாளிகளுக்கு எளிதில் கடன் கிடைக்கச் செய்கிறது”: நிதித்துறை இணையமைச்சர்
Posted On:
08 APR 2022 8:00AM by PIB Chennai
பிரதமரின் முத்ரா திட்ட தூண்கள் வாயிலாக உள்ளார்ந்த நிதிச்சேவைகளை வழங்குவதன் 7-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் வேளையில், இந்தத் திட்டம் மற்றும் அதன் சாதனைகளில் சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் திரு.நரேந்திர மோடியால் 08, ஏப்ரல் 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் 7-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் வேளையில், “வருமானம் திரட்டும் நடவடிக்கைகளுக்காக இத்திட்டத்தின் கீழ் 34.42 கோடிக்கு மேற்பட்ட கடன் கணக்குகளுக்கு ரூ.18.60 லட்சம் கோடி கிடைக்க வகை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் வாயிலாக, வர்த்தக சூழல் மற்றும் அதிக அளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றி குறிப்பிட்ட நிதியமைச்சர், “இந்தத் திட்டம் சிறு தொழில்களுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவியிருப்பதுடன் அடித்தட்டு அளவில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவி உள்ளது. 68%க்கும் மேற்பட்ட கடன் கணக்குகள் பெண்களுக்கும், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை கடன் உதவி பெறாத உரிய தொழில் முனைவோருக்கு 22% கடன்களும் வழங்கப்பட்டுள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.
முத்ரா பயனாளிகள் அனைவருக்கும் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கும் அதே வேளையில், கடனுதவி தேவைப்படும் மற்ற நபர்களும் இத்திட்டத்தில் இணைய முன்வருவதோடு, தேச வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ள திருமதி. நிர்மலா சீதாராமன், “இதுவரை வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 51% எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பது, பிரதமரின் முத்ரா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டியிருப்பதுடன் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற பிரதமரின் தாரக மந்திரத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் காரத் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கம் யாதெனில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தடையற்ற முறையில் அமைப்பு ரீதியான கடன் வழங்குவதாகும்” என்று தெரிவித்துள்ளார்.
“இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் 34.32 கோடி கணக்குதாரர்களுக்கு நிதியுதவி வழங்கியதன் மூலம், இத்திட்டம் வளரும் தொழில் முனைவோரை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது” என்று நிதித்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.
கடன் வழங்குவது பற்றி குறிப்பிட்டுள்ள நிதித்துறை இணையமைச்சர், “பிரதமரின் முத்ரா திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நித்தி ஆயோக் அமைப்பால் அடையாளம் காணப்பட்ட ‘முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களை’ சேர்ந்த எண்ணற்ற பயனாளிகளுக்கு கடன் வழங்க முடிந்திருப்பது, கடன் கிடைக்காமல் தவிக்கும் இந்த மாவட்டங்களுக்கு கடன் கிடைக்கச் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உள்ளார்ந்த நிதி சேவை திட்டம், இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு வங்கிச் சேவை அளித்தல், பாதுகாப்பு இல்லாதவர்களை பாதுகாத்தல் மற்றும் கடனுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு கடனுதவி வழங்குதல் ஆகிய 3 தூண்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், சம்பந்தப்பட்ட பல தரப்பினரின் கூட்டு முயற்சி காரணமாகவும் மேற்குறிப்பிட்ட 3 நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உள்ளார்ந்த நிதி சேவையின் 3 முக்கியத் தூண்களின் ஒன்றான – இதுவரை நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நிதியுதவி வழங்குவது என்பது, பிரதமரின் முத்ரா திட்டம் மூலம் உள்ளார்ந்த நிதி சேவை சூழல் முறையில் பிரதிபலிக்கிறது, இது சிறு தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு திட்டங்கள் வாயிலாக, இளம் தொழில் முனைவோர் முதல் கடினமாக உழைக்கும் விவசாயிகள் வரையிலான சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதே பிரதமரின் முத்ரா திட்டத்தின் நோக்கமாகும்.
நலிவடைந்த பிரிவினருக்கு நிதியுதவி வழங்கி, அதன் மூலம் சமூக-பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கான முக்கியத் திட்டமான பிரதமரின் முத்ரா திட்டம், லட்சக்கணக்கானோரின் விருப்பங்கள் மற்றும் கனவுகளுக்கு சிறகுகளை அளிப்பதோடு சுய – மதிப்பு மற்றும் சுதந்திரத்துடன் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
கடந்த 7 ஆண்டுகளில் பிரதமரின் முத்ரா திட்டம் மற்றும் அதன் சாதனைகளின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
பிரதமரின் முத்ரா திட்டத்தின் முக்கிய அம்சங்கள் (PMMY):
- பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதியுதவி நிறுவனங்கள், இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள், ‘சிஷூ’, ‘கிஷோர்’ மற்றும் ‘தருண்’ ஆகிய 3 பிரிவுகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இது கடன் வாங்குவோரின் நிதி தேவை மற்றும் முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின் நிலையை குறிக்கிறது.
- சிஷூ: ரூ.50,000/- வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
- கிஷோர்: ரூ.50,000-க்கும் மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
- தருண்: ரூ. 5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
- புதிய தலைமுறையைச் சேர்ந்த முன்னேற்றத்தை விரும்பும் இளைஞர்களிடையே தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், சிஷூ பிரிவு கடன்கள் வழங்குவதுடன் அதன் தொடர்ச்சியாக கிஷோர் மற்றும் தருண் பிரிவுகளிலும் அதிக கவனம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.
- விதிமுறைகளுக்கு உட்பட்டு சிஷூ, கிஷோர் மற்றும் தருண் திட்டங்களின் மூலம் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஒட்டு மொத்த நோக்கமாக கொண்டு, பல்வேறு துறைகள் / வர்த்தக நடவடிக்கைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முத்ரா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- கோழிப்பண்ணை, பால்பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட உற்பத்தி, வர்த்தக மற்றும் சேவை துறைகளின் வருவாய் திரட்டும் நடவடிக்கைகளுக்காக காலவரம்புடன் கூடிய கடன் மற்றும் செயல் முதலீடு போன்ற நிதியுதவிகளை பூர்த்தி செய்வதற்காக பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
- இந்த கடன்களுக்கான வட்டி விகிதம், ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடன் வழங்கும் நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது. செயல் முதலீட்டை பொறுத்தவரை, கடன்தாரர் ஒரு இரவு முழுவதும் வைத்திருக்கும் பணத்திற்கு மட்டும் வட்டி விதிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் சாதனைகள் (25.03.2022 நிலவரப்படி)
- இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து (25.03.2022 நிலவரப்படி) ரூ.18.60 லட்சம் கோடி அளவுக்கு 34.42 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கடன் தொகையில் 22% கடன்கள் புதிய தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் (25.03.2022 நிலவரப்படி) ரூ.3.07 லட்சம் கோடி அளவிற்கு 4.86 கோடி கடன்கள் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
- மொத்த கடன்களில் 68% அளவுக்கு பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கடன்களுக்கான சராசரி டிக்கெட் அளவு ரூ.54,000/- ஆகும்.
- 86% கடன்கள் ‘சிசு’ வகையைச் சேர்ந்தவை.
- ஏறத்தாழ 22% கடன்கள் புதிய தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சுமார் 23% கடன்கள் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ளது; சுமார் 28% கடன்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (மொத்தத்தில் 51% கடன்கள் ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு) வழங்கப்பட்டுள்ளது.
- சுமார் 11% கடன்கள் சிறுபான்மையினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரிவுவாரியான விவரம் வருமாறு:-
பிரிவு
|
கடன்களின் எண்ணிக்கை (%)
|
வழங்கப்பட்ட தொகை (%)
|
சிஷூ
|
86%
|
42%
|
கிஷோர்
|
12%
|
34%
|
தருண்
|
2%
|
24%
|
மொத்தம்
|
100%
|
100%
|
கொவிட் பெருந்தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டு தவிர திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் இலக்குகள் எட்டப்பட்டுள்ளது. ஆண்டு வாரியாக வழங்கப்பட்ட தொகை விவரம் வருமாறு;-
ஆண்டு
|
வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை (கோடியில்)
|
வழங்கப்பட்ட தொகை (ரூ.லட்சம் கோடியில்)
|
2015-16
|
3.49
|
1.37
|
2016-17
|
3.97
|
1.80
|
2017-18
|
4.81
|
2.54
|
2018-19
|
5.98
|
3.22
|
2019-20
|
6.22
|
3.37
|
2020-21
|
5.07
|
3.22
|
2021-22 (as on 25.03.2022)*
|
4.86
|
3.07
|
மொத்தம்
|
34.42
|
18.60
|
*தற்காலிகமானது
பிற முக்கிய தகவல்கள்
முறையாக திருப்பிச் செலுத்தப்படும் சிஷூ கடன்களுக்கான 2% வட்டி தள்ளுபடி, தகுதியுள்ள அனைத்து கடன்தாரர்களுக்கும் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ் 14.05.2020 அன்று மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இதுவரை கண்டிராத நிலைமையை எதிர்கொள்ளும் விதமாக, கடன் செலவை குறைப்பதன் மூலம் ‘பிரமிடின் அடியில்’ தவிக்கும் கடன்தாரர்களின் நிதிச்சுமையை போக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டது.
- இத்திட்டத்திற்கு 24, ஜூன் 2020-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI) ரூ.775 கோடி விடுவிக்கப்பட்டது.
- திட்ட நடைமுறை: பொதுத்துறை வங்கிகள் (PSBs), தனியார் துறை வங்கிகள், மண்டல கிராமிய வங்கிகள் (RRBs), சிறு நிதி வங்கிகள் (SFBs), வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் குறு நிதி நிறுவனங்கள் (MFIs) போன்ற அனைத்து வகையான உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும்.
செயல்பாடு: 25.03.2022 நிலவரப்படி சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு ரூ.775 கோடி விடுவிக்கப்பட்டு, இதில் ரூ.658.25 கோடி இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியால் உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, கடன்தாரர்களின் வங்கிக் கணக்குகளில் வட்டி தள்ளுபடியை வரவு வைப்பதற்காக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
*******
(Release ID: 1814641)
(Release ID: 1814720)
Visitor Counter : 12734
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam