இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தடகள வீரர்கள் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி பெற விளையாட்டு அமைச்சகம் ரூ.190 கோடி செலவிட உள்ளது; இந்திய அணியினரை சுமூகமாக தேர்வு செய்ய தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2022 4:12PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், 33 விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கான வருடாந்திர அட்டவணையை இறுதி செய்திருப்பதுடன், 2022-23 நிதியாண்டில் பல்வேறு தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு நிதியுதவியாக ரூ.259 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.190 கோடி, 2022 காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறவும், வெளிநாட்டு வீரர்கள் பின்பற்றும் உத்திகளை அறிந்து கொள்ளவும், சாதனங்கள் வாங்கவும், உதவிப் பணியாளர்களுக்கும் செலவிடப்படும். 33 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடன் ஆலோசித்து இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். 2022 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மற்றும் செப்டம்பர் மாதத்தில் சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு இந்த நிதி செலவிடப்படும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 33 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் தவிர, மேலும் 3 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் அங்கீகரிக்கப்பட இருப்பதாகவும், இவர்களுக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813201
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1813335)
வருகையாளர் எண்ணிக்கை : 226