சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திய செஞ்சிலுவை சங்க ஆம்புலன்ஸ் வாகனங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கொடியசைத்து தொடங்கிவைத்தார்
Posted On:
04 APR 2022 10:51AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள நிர்மாண் பவனியிலிருந்து 33 ஆம்புலன்ஸ் வாகனங்களை (13 நவீன உயிர்க்காப்பு சாதனங்கள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 20 அடிப்படை உயிர்க்காப்பு சாதனங்கள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள்) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும், இத்துறையின் இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பாஸ்கரும் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு.பகவந்த் கூபாவும் உடனிருந்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களால் வழங்கப்படவிருக்கும் வசதிகள் மற்றும் சேவைகள் பற்றி மத்திய அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.
இந்தியாவில் கொவிட் தொற்றை எதிர்கொள்ள ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் ஏஎல்எஸ், பிஎல்எஸ் ஆம்புலன்ஸ் வாகனங்கள், நடமாடும் சுகாதாரப் பிரிவுகள், நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனங்கள் வாங்குவதற்காக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு நிதி ஒதுக்கியது. மருத்துவ வாகனங்களின் முதலாவது ஒதுக்கீட்டின் பகுதியாக இந்த 33 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. சுகாதாரம் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை மேம்படுத்துவதற்காக இவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு முக்கியமான பணியை வகித்தது. பெருந்தொற்றின் தாக்கத்தை குறைப்பதில் பெரும் பங்காற்றியது. நாடு முழுவதும் ரத்தம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏராளமான முகாம்களை இவை நடத்தின. ஓர் அமைப்பு என்ற முறையில் ஐஆர்சிஎஸ்சி-யின் பணிகள் பரவலான முறையில் பல பரிமாணங்களுடன் இருந்தன.
****
(Release ID: 1813101)
Visitor Counter : 229