பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனிதத்துவம் நிறைந்த டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார ஸ்வாமிகளின் பிறந்தநாளில் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2022 11:38AM by PIB Chennai

புனிதத்துவம் நிறைந்த டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார ஸ்வாமிகளின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-

புனிதத்துவம் நிறைந்த டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார ஸ்வாமிகளின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். எண்ணற்ற மக்களின் இதயங்களில் அவர் வாழ்கிறார். இணையற்ற அவரின் சமூக சேவையையும், சுகாதாரம் மற்றும் கல்விக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1812338) வருகையாளர் எண்ணிக்கை : 199