பிரதமர் அலுவலகம்
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சாரத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
31 MAR 2022 1:32PM by PIB Chennai
மதிப்புக்குரிய அவைத்தலைவர் அவர்களே,
உரையாளர்களுக்கு நீங்கள் கால நிர்ணயம் செய்திருக்கிறீர்கள். அந்த எல்லைக்குள் இருந்து எனது உணர்வுகளை வெளிப்படுத்த நான் முயற்சி செய்கிறேன்.
மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறுவோருக்கு நாம் பிரிவு உபச்சாரம் நடத்துகிறோம். அவைத்தலைவர் கூறியது போல, இவர்கள் அதிக அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஐந்து ஆண்டுகளும், சிலர் நான்கு ஆண்டுகளும், சிலர் மூன்று ஆண்டுகளும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த மகத்தான ஆளுமைகள் ஏராளமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். சில நேரங்களில் அனுபவம் என்பது அறிவை விட அதிகம் சக்தி வாய்ந்ததாகும். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் உணர்வுகள், மனநிலை மற்றும் இன்ப, துன்பங்களை அவை பிரதிபலிக்கின்றன. சில உறுப்பினர்கள் அவையிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களது பழுத்த அனுபவத்தை நாட்டின் அனைத்து பகுதிக்கும் எடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ள வகையில் மேற்கோள்காட்டும் விதமாக ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்களது அனுபவங்கள் குறித்து எழுத வேண்டும். இவர்கள், நாடு செல்ல வேண்டிய திசையை ஒழுங்குபடுத்துவதுடன் அவர்களின் நினைவுகளை நாட்டின் முன்னேற்றத்திற்கு அமைப்பு ரீதியான வகையில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
இவர்கள் விடைபெறுவதன் மூலம், இவர்கள் மேற்கொண்டு வந்த பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு காரணமாக எஞ்சிய உறுப்பினர்களின் பணி அதிகரிக்கிறது. உறுப்பினர் என்ற முறையில் நாம் இந்த அவைக்கு அளித்து வரும் பங்களிப்பு ஏராளம் என்பது உண்மை என்றாலும், அதேவேளையில் இந்த அவையும் நமக்கு ஏராள வாய்ப்புகளை வழங்கியிருப்பதும் உண்மை. இந்திய சமுதாயத்தின் தற்போதைய மற்றும் அளவற்ற உணர்வுகளை உணரக்கூடிய வாய்ப்பை அவை நமக்கு தினந்தோறும் தருகிறது.
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டத்தில் மக்களை ஈர்க்க வேண்டும். இந்த தேசம் உங்களிடமிருந்து ஏராளமான பலத்தையும், பயனையும் பெறும் என்று நான் நம்புகிறேன்.
அனைத்து சகாக்களின் பெயர்களையும் நாம் தனித்தனியாக குறிப்பிடவில்லை. இதனை நான் செய்ய வேண்டும் என்று அவைத் தலைவர் கூறினார். எனவே நிச்சயமாக இவர்களை தனித்தனியாக சந்திப்பதற்கு நான் முயற்சி செய்வேன். அப்போது உங்களுடன் எனது மனம் திறந்து பேசுவேன். உங்களின் சிறந்த குணங்களை நான் நிச்சயமாக உணர்ந்திருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
***************
(रिलीज़ आईडी: 1812252)
आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam