ஆயுஷ்
பிரதமரின் யோகா விருதுகள் 2022-க்கான விண்ணப்பங்களை ஆயுஷ் அமைச்சகம் வரவேற்கிறது
சர்வதேச யோகா தினத்தன்று (21 ஜூன் 2022) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்
Posted On:
30 MAR 2022 10:49AM by PIB Chennai
பிரதமரின் யோகா விருதுகள் 2022-க்கான விண்ணப்பங்களை ஆயுஷ் அமைச்சகம் வரவேற்றுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று (21 ஜூன் 2022) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இந்த விருதுக்கான நடைமுறைகள் மை கவ் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. (https://innovateindia.mygov.in/pm-yoga-awards-2022/) விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கான இரண்டு வகைமைகளையும், சர்வதேச அளவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான இரண்டு வகைமைகளையும் இந்த விருது கொண்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் யோகாவிற்கு தலை சிறந்த பங்களிப்பை செய்திருப்பதோடு யோகா குறித்து ஆழமான புரிதலையும் கொண்டிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள தனிநபர் மற்றும் அமைப்புகள் விண்ணப்ப நடைமுறை மற்றும் பங்கேற்பைப் பற்றி https://innovateindia.mygov.in/pm-yoga-awards-2022/ இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 28-ந் தேதி தொடங்கியுள்ள விண்ணப்ப நடைமுறைக்கு 2022 ஏப்ரல் 27 கடைசி நாளாகும்.
விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது யோகா துறையில் பிரபலமான தனிநபர் அல்லது அமைப்பு பரிந்துரை செய்யலாம். விண்ணப்பதாரர் தேசிய விருது அல்லது சர்வதேச விருது என ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811219
***************
(Release ID: 1811568)