சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 183.82 கோடியைக் கடந்தது


இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14,704 ஆக குறைந்துள்ளது 707 நாட்களுக்குப் பிறகு 15,000-ஐ விட குறைவாக உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAR 2022 9:57AM by PIB Chennai

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14,704 ஆக குறைந்துள்ளது 707 நாட்களுக்குப் பிறகு 15,000-ஐ விட குறைவாக உள்ளது.

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 183.82 கோடிக்கும் அதிகமான (1,83,82,41,743) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,19,19,610 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 1.50 கோடிக்கும் அதிகமான (1,50,55,291) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,876. பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,87,410.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில்  6,24,022 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 78.85 கோடி (78,85,56,935). வாராந்திரத் தொற்று 0.25  சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.20 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811183

 

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1811233) வருகையாளர் எண்ணிக்கை : 226
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Malayalam