பிரதமர் அலுவலகம்
ஆந்திர மாநிலம் சித்தூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2022 12:41PM by PIB Chennai
ஆந்திர மாநிலம் சித்தூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரவிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வீதம் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
‘’ ஆந்திராவின் சித்தூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைவார்கள் என நம்புகிறேன்.
உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும்’’
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1810203)
வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam