பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்ததற்காக தோஹாவில் உள்ள கத்தார் நாட்டுக்கான இந்திய தூதரகத்திற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 26 MAR 2022 9:11AM by PIB Chennai

யோகா பயிற்சி மேற்கொள்வதற்காக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்க, தோஹாவில் உள்ள கத்தார் நாட்டுக்கான இந்திய தூதரகம் மேற்கொண்ட பெரும் முயற்சிக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு அடிப்படையில் உலகம் முழுவதையும் யோகா ஒன்றிணைப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்வி்ட்டர் பதிவில்,

“சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு என்ற நோக்கத்தில், ஒட்டுமொத்த உலகையும், யோகா ஒன்றிணைக்கிறது. யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்க @IndEmbDoha பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது”  என்று தெரிவித்துள்ளார்.

 *************** 


(रिलीज़ आईडी: 1809960) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam