மத்திய அமைச்சரவை
சில வகை தாதுப்பொருட்களுக்கான ராயல்டி தொகையை நிர்ணயிக்க, சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ல் 2-வது அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
09 MAR 2022 1:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், க்ளூக்கோநைட், பொட்டாஷ், எமரால்டு, பிளாட்டினம் வகை உலோகங்கள், அன்டாலுசைட், சிலிமனைட் மற்றும் மாலிப்டினம் போன்ற தாதுப்பொருட்களுக்கான ராயல்டி தொகையை நிர்ணயிக்க ஏதுவாக, சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ல் 2-வது அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட தாதுப்பொருள் சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படுவதை உறுதி செய்வதோடு அவற்றின் இறக்குமதியையும் கணிசமாக குறைப்பதுடன், சுரங்கத்துறையில் அதிகாரமளித்தலுக்கான வாய்ப்புகளையும் இந்த அனுமதி உறுதி செய்யும். மேலும் சமுதாயத்தின் பெரும்பாலானோரின் உள்ளார்ந்த வளர்ச்சியை உறுதி செய்யவும் இது உதவும். இறக்குமதி குறைக்கப்படுவதுடன் அந்நியச் செலாவணியை சேமிக்கவும் இந்த அனுமதி வகை செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804282
-----
(Release ID: 1804390)
Visitor Counter : 255
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam