பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
Posted On:
08 MAR 2022 11:48AM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் சிறந்த சாதனைகளைப் புரிந்த 29 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 28 விருதுகள் (ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 14 வீதம்) 29 பெண்களுக்கு, பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள ஒடுக்கப்பட்ட பிரிவு மகளிரின் அதிகாரமயமாக்கலுக்கு அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக வழங்கப்பட்டன.
பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த விருதுகளை அறிவிக்கிறது. சமுதாயத்தின் ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கு உந்துசக்தியாக விளங்கும் பெண்களை அங்கீகரித்து அவர்களது பணிகளை பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட நிலை காரணமாக 2021-ம் ஆண்டில் நடைபெறவில்லை.
***************
(Release ID: 1803999)
Visitor Counter : 225
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada