பிரதமர் அலுவலகம்
பெண் கல்வி நுழைவு விழா பிரச்சாரத்திற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
08 MAR 2022 2:00PM by PIB Chennai
பெண் கல்வி நுழைவு விழா பிரச்சாரம், கல்வி மகிழ்ச்சியை மேலும் அதிக பெண்கள் பெறுவதை உறுதி செய்யும் அற்புதமான முயற்சி என பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு உள்ளார். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு இளம் பெண்ணும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை பெறுவதற்கு அனுமதிப்பதை உறுதி செய்யும் இந்த பிரச்சாரம் ஒரு இயக்கமாகும்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானியின் டுவிட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“கல்வி என்னும் மகிழ்ச்சியை மேலும் அதிக பெண்கள் பெறுவதை உறுதிசெய்யும் அருமையான முயற்சி! நாம் அனைவரும், ஒரு நாடாக ஒன்று சேர்ந்து இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்குவோம்.”
***************
(रिलीज़ आईडी: 1803929)
आगंतुक पटल : 289
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam