பிரதமர் அலுவலகம்
கட்ச் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மகளிர் தினம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
சமூகத்தில் பெண் துறவிகளின் பணி மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தலில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கக் கருத்தரங்கு நடத்தப்படுகிறதுz
प्रविष्टि तिथि:
07 MAR 2022 3:25PM by PIB Chennai
கட்ச் நகரில் உள்ள டோர்டோ பெண் துறவிகள் முகாமில் 2022, மார்ச் 08 அன்று மாலை 6 மணிக்கு சர்வதேச மகளிர் தினம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுவார். சமூகத்தில் பெண் துறவிகளின் பணி மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தலில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. டோர்டோ கருத்தரங்கில் 500-க்கும் அதிகமான பெண் துறவிகள் கலந்து கொள்வார்கள்.
இந்தியக் கலாச்சாரத்தில் பெண்களின் பங்கு, சமூக அந்தஸ்து, கலாச்சாரம், சமயம், பெண்கள் மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட அமர்வுகள் இந்தக் கருத்தரங்கில் இடம் பெறும். பெண்களின் சாதனைகளோடு பெண்கள் பயனடையும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.
மத்திய அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி, மத்திய இணையமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வில் சாத்வி ரீதாம்பரா, மகா மண்டலேஷ்வர் கங்கேஷ்வாரிதேவி ஆகியோரும் பங்கேற்பார்கள்.
***
(रिलीज़ आईडी: 1803628)
आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam