பிரதமர் அலுவலகம்

ஒடிசா முன்னாள் முதலமைச்சர் திரு ஹேமானந்த பிஸ்வால் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 25 FEB 2022 10:34PM by PIB Chennai

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு ஹேமானந்த பிஸ்வால் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வருமாறு;

‘’ ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் திரு ஹேமானந்த பிஸ்வால் மறைவு குறித்து வேதனையடைந்தேன். பொதுவாழ்வில் பல ஆண்டுகள் தீவிரமாக செயல்பட்டு, மக்களுக்காக முழுமூச்சுடன் பணியாற்றினார். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’’

****(Release ID: 1801573) Visitor Counter : 181