பிரதமர் அலுவலகம்

அருணாச்சலப் பிரதேசத்தின் பொன்விழா & 36 ஆவது மாநில தின கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 20 FEB 2022 12:12PM by PIB Chennai

அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர சகோதரிகளே!

ஜெய்ஹிந்த்!

அருணாச்சலப்பிரதேசத்தின் 36 ஆவது மாநில தினத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 50 ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு எல்லைப்புறப் பகுதி (NEFA) ‘அருணாச்சலப் பிரதேசம்’ என்ற புதிய பெயரையும்,  புதிய அடையாளத்தையும் பெற்றது.  உதயசூரியனின் இந்த அடையாளம் மற்றும் புத்துயிர் கடந்த 50 ஆண்டுகளில், உங்கள் அனைவரின் விடாமுயற்சி மற்றும் தேசப்பற்று மிக்க சகோதரிகள் மற்றும் சகோதரர்களால்  அயராது வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

50 ஆண்டுகளுக்கு முன் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்த அற்புதத்தை கண்ட பாரத் ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகா, ‘அருணாச்சல் ஹுமாரா’ என்ற தலைப்பில் பாடல் ஒன்றை எழுதினார். இந்த பாடல் அருணாச்சலப்பிரதேச மக்கள் அனைவராலும் போற்றப்படுவதை நான் அறிவேன்.  இந்த பாடல் இன்றி எந்த நிகழ்ச்சியும் நிறைவடைவதில்லை.  எனவேதான் உங்களிடையே உரையாற்றும் போது, நானும் அந்த பாடலின் சில வரிகளை பயன்படுத்த விரும்புகிறேன். 

அருண் கிரண் ஷீஷ் பூஷன்

அருண் கிரண் ஷீஷ் பூஷன்

தொண்டை பனி நீரோடை,

காலை சூரியன் முத்தமிட்ட நாடு,

எங்கள் அருணாசலம்

எங்கள் அருணாசலம்

அன்னை இந்தியா ராஜ்துலாரா

அன்னை இந்தியா ராஜ்துலாரா

அருணாசலம் நமதே!

நண்பர்களே,

அருணாச்சலப்பிரதேசம் காட்டிய வழி, தேசப்பற்று மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு புதிய உச்சத்தை அளித்துள்ளது, அருணாச்சலப்பிரதேசம் தழைத்தோங்கிய விதம், அதன் கலாச்சார பாரம்பரியத்தை நிலைநிறுத்தியிருப்பதுடன், உங்கள் பாரம்பரியத்துடன், வளர்ச்சியையும் நீங்கள் எடுத்துச் செல்லும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஊக்கமளிக்கும்.

நண்பர்களே,

சுதந்திரப் பெருவிழாவை முன்னிட்டு, நாட்டிற்காக தங்களது இன்னுயிரை ஈந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து தியாகிகளையும், நாடு நினைவுகூருகிறது.  ஆங்கிலோ-அபோர் சண்டையாக இருந்தாலும் சரி, சுதந்திரத்திற்குப் பிறகு எல்லைப் புற பாதுகாப்பாக இருந்தாலும் சரி, அருணாச்சலப்பிரதேச மக்களின் வீரம் பற்றிய கதை, ஒவ்வொரு இந்தியருக்கும், மதிப்பிட முடியாத பாரம்பரியமாகும். 

நண்பர்களே,

கிழக்கு இந்தியா, குறிப்பாக வடகிழக்கு இந்தியா, 21 ஆம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சிக்கான இயந்திரமாக திகழும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டுள்ளேன்.  இந்த உணர்வோடு, அருணாச்சலப்பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூவுடன் நான் எப்போது பேசினாலும், அப்போதெல்லாம் அவர் அருணாச்சலப்பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக புதிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார்.    

நண்பர்களே,

இயற்கை அதன் ஏராளமான பொக்கிஷங்களை அருணாச்சலுக்கு கொடையாக அளித்துள்ளது.  நீங்கள் இயற்கையை உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக கொண்டிருக்கிறீர்கள்.  அருணாச்சலப்பிரதேசத்தின் சுற்றுலா வாய்ப்புகள் உலகம் முழுவதும் கொண்டு செல்ல நாங்கள் முயற்சித்து வருகிறோம்.  இரட்டை இயந்திர அரசு அருணாச்சலப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான எந்த வாய்ப்பையும் விட்டு விடாது என மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்.  மாநில தினம் மற்றும் ‘அருணாச்சலப்பிரதேஷ்’ என பெயரிட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவை யொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

****



(Release ID: 1800052) Visitor Counter : 162