எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் எஸ்ஏஐஎல்-விஐஎஸ்எல்-ன் இதயப் பரிசோதனை முகாம்

प्रविष्टि तिथि: 17 FEB 2022 2:09PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் இந்திய உருக்கு ஆணையத்தின் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்கு நிறுவனத்தில், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இருதய பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

 ஜனவரி மாதம் 19, 29 மற்றும் நேற்றைய தினங்களில் நடைபெற்ற இந்த முகாமில், 30 பெண்கள் உள்பட 285 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, ஆக்சிஜன் அளவு, எக்கோ மற்றும் இசிஜி பரிசோதனைகள் நடைபெற்றன.

விஐஎஸ்எல்-ன் மனித வள மேம்பாட்டு மையத்தில், சிமோகாவில் உள்ள சகயாத்ரி நாராயண ஹ்ருதாலயாவின் மருத்துவர்கள் குழுவால் நடத்தப்பட்டது. விஐஎஸ்எல்-ன் மனிதவள மேம்பாட்டுத் துறை, பொது மக்கள் தொடர்புத்துறை, மருத்துவத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனை முகாம்  நடைபெற்றது.  இருதய நிபுணர்கள் டாக்டர்கள் ஷரத் சங்கனா கவுடர், எஸ்.வி. சித்தார்த் ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

***************


(रिलीज़ आईडी: 1799035) आगंतुक पटल : 321
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada