பிரதமர் அலுவலகம்

பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 06 FEB 2022 10:27AM by PIB Chennai

பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினருடன் பேசிய பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இந்திய கலாச்சாரத்தின் சின்னம் என்று வருங்கால தலைமுறையினர் அவரை நினைவுகூர்வர் என்று பிரதமர் கூறினார். அவரது இனிமையான குரல் மக்களை வசியப்படுத்தும் ஒப்பற்ற திறனைப் பெற்றிருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

‘’ நான் சொல்லொணா துயரத்தில் உள்ளேன். அன்பான, கனிவான லதா தீதி நம்மோடு இல்லை. அவர் நமது தேசத்தில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கி பிரிந்துள்ளார். ஈடுஇணையற்ற காந்தக் குரலுடன் மக்களை வசீகரித்த இந்திய கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்ந்த  இவரை வருங்கால தலைமுறையினர் நினைவில் கொள்வார்.

லதா தீதியின் பாடல்கள் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக் கொண்டு வந்துள்ளன. பல தசாப்தங்களாக இந்திய சினிமா உலகின் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தார். சினிமாவைத் தாண்டி இந்தியாவின் வளர்ச்சியை அவர்  எப்போதும் விரும்பினார். வலிமையான முன்னேறிய இந்தியாவை எப்போதும் காண அவர் விரும்பினார்.

லதா தீதியிடம் நான் எப்போதும் அளவற்ற பாசத்தைப் பெற்றிருந்ததை எனது பெருமையாகக் கருதுகிறேன்.  அவருடனான எனது தொடர்பு மறக்க முடியாததாக இருக்கும். லதா தீதியின் மறைவால் எனது சக இந்தியர்களுடன் நான் துக்கப்படுகிறேன்.  அவரது குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினேன்.  ஓம் சாந்தி.

****



(Release ID: 1795898) Visitor Counter : 145