நிதி அமைச்சகம்

அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் – இத்திட்டத்தின்கீழான கடன் உத்தரவாதம் விருந்தோம்பல் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் வரையில் விரிவுபடுத்தப்படும்

Posted On: 01 FEB 2022 12:51PM by PIB Chennai

அவசர கால கடன் உத்தரவாதத்  திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இத்திட்டத்தின்கீழான கடன் உத்தரவாதம், விருந்தோம்பல் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் வரை விரிவுபடுத்தப்படும்.

இதன்மூலம் இத்திட்டத்தின் கீழ் மொத்த கடன் உத்தரவாதம்  5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கூடுதலாக 130 லட்சம் குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுவதன் மூலம், பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை    எதிர்கொள்ள இயலும். 

உதயம், இ-ஷ்ரம், என்சிஎஸ், ஏஎஸ்இஇஎம் ஆகிய இணைய தளங்கள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட கடனுறுதி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி குறு-சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 

குடைகளுக்கான தீர்வை 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதன் உதிரிபாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு திரும்பப் பெறப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

*******



(Release ID: 1794345) Visitor Counter : 366