நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப் படைகளுக்கான உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிதிநிலை அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது

प्रविष्टि तिथि: 01 FEB 2022 1:08PM by PIB Chennai

ஆயுதப் படைகளுக்கான உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில்  2021-22ல் 58 சதவீதத்தில் இருந்த உள்நாட்டுத் தொழில்துறைக்கான மூலதன கொள்முதல் அளவை, 2022-23க்கு 68 சதவீதமாக நிதிநிலை அறிக்கை ஒதுக்கியுள்ளது. இதனை மத்திய பட்ஜெட் 2022-23-ஐ நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கையில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தொழில்துறை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறினார். சிறப்பு பயன்பாட்டு முறை மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து ராணுவ தளங்கள் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ள தனியார் தொழில்துறைகள் ஊக்குவிக்கப்படும். பெரிய அளவிலான சோதனை மற்றும் சான்றிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு சுயேச்சையான தொடர்பு முகைமை அமைக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.


(रिलीज़ आईडी: 1794287) आगंतुक पटल : 297
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Telugu , Malayalam