நிதி அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள், வர்த்தக வங்கி நடைமுறைகள் மூலம் சரி செய்யப்பட்டிருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                31 JAN 2022 2:58PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் வர்த்தக வங்கி நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின் மூலம்  சரி செய்யப்பட்டு வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் வரை வங்கிக் கடன் விகிதம் 9.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 
முந்தைய ஆண்டு 9.2 சதவீதமாக இருந்த தனிநபர் கடன், கடந்த ஆண்டில் 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், வீட்டு வசதி கடன் 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், வாகன கடன்களுக்கான கடன் விகிதம் 6.9 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண் கடன்கள் 7 சதவீதத்தில் இருந்து 10.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
 
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக, 0.6 சதவீதமாக இருந்த சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள் 2021-ம் ஆண்டில் 12.7 சதவீதமாக  உயர்ந்துள்ளது. 
காப்பீட்டுக்கான வைப்புத் தொகை
காப்பீட்டுக்கான வைப்புத் தொகை மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக காப்பீட்டு துறை சார்ந்த வைப்புத் தொகையில் குறிப்பிடத்தக்க அளவு  மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வைப்புத் தொகைக்கான காப்பீடுகள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 5763 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் 27 வர்த்தக வங்கிகள் மூலம் 296 கோடி ரூபாயும், கூட்டுறவு வங்கிகள் மூலம் 5,467 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. 
மின்னணு பணப்பரிமாற்றம்
நாட்டில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற நடைமுறையே தற்போதைய ஒரே மிகப்பெரிய சில்லறை பணப்பரிவர்த்தனை முறையாக உள்ளது. இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரை 4.6 பில்லியன் எண்ணிக்கையில் 8.26 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
***************
                
                
                
                
                
                (Release ID: 1793972)
                Visitor Counter : 304